புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

23 ஏப்., 2020

சிறிலங்காவில் அதிகரித்துள்ள கொரொனா தொற்றாளர்கள்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் இன்று (22.04.2020) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான குறித்த 11 பேரும், பேருவளை பகுதியில் இருந்து தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்பட்டவர்களாவர்.

மேலும், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 321 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, 210 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதோடு, 104 பேர் நோயிலிருந்து தேறியுள்ளனர்.

அத்தோடு, இலங்கையில் ஏழு பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.