23 ஏப்., 2020

பிரான்சில் ஈழத்துக் கலைஞர் ஒருவர் உயிரிழப்பு

பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு உள்ளாகி ஈழத்தமிழ் கலைத்தாயின் மூத்தமகன் ஏ.இரகுநாதன் உயிரிழந்துள்ளார்.


கடந்த சில நாட்களுக்கு முன்னர் மருத்தமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று மதியம் 14:00 மணியளவில் உயிர்பிரித்தார் என்ற செய்தி மருத்துமனையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த ஏ. ரகுநாதன் ஈழத்தின் மூத்த கலைஞர்களில் ஒருவர். மேடை நாடகம், திரைப்படம், வானொலி, குறுந்திரைப்படங்கள் என்று பல்வேறு தளங்களில் செயற்பட்டு வந்தவர். கலையரசு சொர்ணலிங்கம் அவர்களின் மாணவன். தற்போது பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வந்தவர்.

பிரான்ஸ், நெதர்லாந்து, ஜேர்மனி, கனடா, இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் படப்பிடிப்பு நடத்தி அங்கெல்லாம் வாழும் தமிழ்க் கலைஞர்கள் பங்குபற்றும் பிரமாண்டமான தொலைக்காட்சித் தொடர் ஒன்று தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தவர்.