புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மார்., 2021

யாழில் சிங்களவரும் களமிறங்கினார்?

www.pungudutivuswiss.com
கண்டியைச் சேர்ந்த டீமன் ஆனந்த என்பவரினால் இன்றைய தினம் தினம் சுப்பிரமணியம் பூங்கா முன்னறில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் , கடத்தி படுகொலை செய்யப்பட்டோருக்கு என்ன நடந்தது என இந்த அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்து யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் இந்த அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அதற்கு ஆதரவாக கண்டியைச் சேர்ந்த டீமன் ஆனந்த என்பவர் யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்கா முன்றலில் கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் இலங்கையில் குறிப்பாக வடக்கில் பல இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் இந்த அரசாங்கம் உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.. கடத்தல்கள் படுகொலைகள் ஈடுபட்டவர்கள் தொடர்பில் என்னிடம் பல ஆதாரங்கள் உள்ளன, அந்த ஆதாரங்களை ஜெனிவாவிலும் சமர்ப்பிக்க உள்ளேன்.



எதிர்கால இளைய சமுதாயத்திற்கு கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களின் உண்மைத்தன்மை தெரியப்படுத்தப்பட வேண்டும் குறிப்பாக தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற காணாமலாக்கப்பட்ட உறவுகள் சில காலங்களில் இறந்து விடுவார்கள் ஆனால் எதிர்கால சந்ததியினருக்கு எவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டார்கள் எதற்காக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ற உண்மை தெரியப்படுத்தப்பட வேண்டும்



அத்தோடு தற்போது படுகொலைகள் மற்றும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தற்பொழுது பாராளுமன்றத்திலும் மாகாண சபை உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள் அவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்ய வேண்டும் அதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி இன்றைய தினம் இன்று காலையிலிருந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார.

படுகொலை புரிந்தவர்களில் ஆதாரங்கள் என்னிடம் உள்ளது அதனை ஜனாதிபதியிடம் தெரிவிப்பதற்கு நான் ஜனாதிபதியை சந்திப்பதற்கு கோரியிருந்த போதிலும் இன்றுவரை எனக்கு அந்த சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவே அதனை நான் எதிர்பார்க்கின்றேன் எனினும் ஐநா சபையில் இந்த கடத்தல் படுகொலைகள் தொடர்பான ஆதாரங்களை சமர்பிக்க உள்ளேன் எனவும் தெரிவித்தார்

ad

ad