புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மார்., 2021

ஆசியாவிலேயே 6 வது பணக்கார குடும்பம் ஆனால் நம்பினால் நம்புங்கள்: ஸ்டாலினுக்கு 4கோடி 47 வழக்குக்கள் உதயநிதிக்கு 6 கோடி22 வழக்குகள் : தலைவர்கள் சொத்து மதிப்ப

www.pungudutivuswiss.com

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி இன்று முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், ஸ்டாலின், கமல், தினகரன், சீமான் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் தங்களது அசையும், அசையா சொத்து விவரத்தை வெளியிட்டுள்ளனர்.



முதல்வர் பழனிசாமி




சேலம் எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு வெளியாகி உள்ளது. 2016ல் 3.14 கோடியாக இருந்த அசையும் சொத்து 2.01 கோடியாக குறைந்துள்ளது. 4.66 கோடியாக இருந்த அசையா சொத்து 4.68 கோடியாக உள்ளது. 33 லட்சமாக இருந்த கடன் 29.75 லட்சமாக குறைந்துள்ளது. போடி தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்த துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் சொத்து பல மடங்கு உயர்ந்துள்ளது. 2016ல் 55 லட்சமாக இருந்த அசையும் சொத்து 5.19 கோடியாகி உள்ளது. அசையா சொத்து 98 லட்சத்தில் இருந்து 2.64 கோடியாக உயர்ந்துள்ளது. அவரது மனைவிக்கு 10.06 கோடி சொத்து உள்ளது.
சேலம், இடைப்பாடி தொகுதியில், முதல்வர் இ.பி.எஸ்., வேட்புமனுவுடன் தாக்கல் செய்துள்ள சொத்து விபரம்: முதல்வர் இ.பி.எஸ்., பெயரில் வங்கிகளில் உள்ள இருப்பு என மொத்தம், 47 லட்சத்து, 64 ஆயிரத்து, 542 ரூபாய். முதல்வர் மனைவி ராதாவிடம் கையிருப்பு, 2 லட்சம் ரூபாய், புளுமெட்டல் உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து வரவேண்டிய தொகை, 69 லட்சத்து, 36 ஆயிரத்து, 333 ரூபாய், வங்கிகளில் இருப்பு தொகை, 2 லட்சத்து, 51 ஆயிரத்து, 920 ரூபாய்.தங்க நகை, 720 கிராம், 30 லட்சத்து, 24 ஆயிரம் ரூபாய் என மொத்தம், 1 கோடியே, 4 லட்சத்து, 11 ஆயிரத்து, 631 ரூபாய் என, அசையும் சொத்து மதிப்பு மதிப்பாக காட்டப்பட்டுள்ளது.


latest tamil news



கூட்டு குடும்பத்தின் பெயரில் கையிருப்பு, 11 லட்சம் ரூபாய், வங்கியில், 9 லட்சத்து, 21 ஆயிரத்து 96 ரூபாய், வர வேண்டிய நிலுவைத் தொகை, 30 லட்சம் ரூபாய் என, 50 லட்சத்து, 21 ஆயிரத்து, 96 ரூபாய் என, அசையும் சொத்து மதிப்பில் காட்டப்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் எதுவும் முதல்வர் பெயரில் இல்லை. அவர் மனைவி ராதா பெயரில், 1 கோடியே, 45 லட்சம் ரூபாய் மதிப்பில் விவசாய நிலங்கள் உள்ளன. மனைவி ராதா வங்கியில், 14 லட்சத்து, 75 ஆயிரத்து, 453 ரூபாய் கடன் பெற்றுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தன் பெயரில் நீதிமன்றத்தில் எந்த வழக்கும் நிலுவையில் இல்லை என குறிப்பிட்டுள்ளார். மொத்தம், 10.38 கோடி ரூபாய்க்கு சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த, 2016 சட்டசபை தேர்தலின் போது, இ.பி.எஸ்., மொத்த சொத்து மதிப்பு, 7 கோடியே 50 லட்சத்து 66 ஆயிரத்து 584 ரூபாய் உள்ளது என தெரிவித்து இருந்தார். ஐந்து ஆண்டுகளில், கிட்டத்தட்ட, 3 கோடி ரூபாய்க்கு, அவரது சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.



வீடு இல்லாத ஓ.பி.எஸ்.,


துணை முதல்வர் ஓ.பி.எஸ்., பெயரில் நிலம், வீடு ஏதும் இல்லை. 65.55 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். அதே நேரம், 7.82 கோடி ரூபாய் சொத்து கணக்கு காட்டியுள்ளார். தேனி மாவட்டம், போடி சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க. சார்பில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., போட்டியிடுகிறார்.

வேட்பு மனுதாக்கலின் போது, அவர் தாக்கல் செய்துள்ள சொத்து விபரம்: துணை முதல்வர் ஓ.பி.எஸ்., கையிருப்பாக, 23, ஆயிரத்து, 500 ரூபாய் வைத்துள்ளார். வங்கி டிபாசிட், மூன்று கார்கள், 16 கிராம் தங்கம் வைத்துள்ளார். இவரது அசையும் சொத்துகளின் மொத்த மதிப்பு, 61 லட்சத்து, 19 ஆயிரத்து, 162 ரூபாய். இவரது பெயரில் சொந்த வீடு, நிலம், கட்டடம், வணிக வளாகம் ஏதும் இல்லை. வங்கியில் பெற்ற மொத்த கடன், 65, ஆயிரத்து 55 ஆயிரத்து 411 ரூபாய். வழக்கு ஏதும் நிலுவையில் இல்லை.

மனைவி விஜயலட்சுமி பெயரில், ரொக்கம், நகை உட்பட அசையும் சொத்துகளின் மொத்த மதிப்பு, 4 கோடியே, 57 லட்சத்து, 52 ஆயிரத்து, 415 ரூபாய். அசையா சொத்துகளின் மதிப்பு, 2 கோடியே 63 லட்சத்து, 75 ஆயிரத்து, 105 ரூபாய். மொத்தம், 7.82 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாக கணக்கு காட்டியுள்ளார்.



தந்தைக்கு 11; தனயனுக்கு 28 கோடி


சென்னை, கொளத்துார் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில், அவர் குறிப்பிட்டுள்ள சொத்துகள் மற்றும் வழக்குகளின் விபரம் : ஸ்டாலின் பெயரில், வங்கியில் கையிருப்பாக, 50 ஆயிரம் ரூபாயும், அவர் மனைவிக்கு, 25 ஆயிரம் ரூபாயும் உள்ளது. வங்கி கணக்குகளில் உள்ள இருப்பு, வைப்பு நிதி, வட்டி வருவாய் மற்றும் அறக்கட்டளை பங்காக வர வேண்டிய தொகை என்ற அளவில், ஸ்டாலினுக்கு, 4.95 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்பட்டுள்ளது.

அவரது மனைவி பெயரில், வங்கி கணக்கில் உள்ள தொகை மற்றும், 720 கிராம் பழைய தங்க நகைகள் என, 30.53 லட்சம் ரூபாயும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், 2016ல் ஸ்டாலினுக்கு, நான்கு வங்கி கணக்கு வகைகளில், 80.33 லட்சம் ரூபாயும்; துர்காவுக்கு, 31.25 லட்சம் ரூபாயும் இருந்ததாக கூறப்பட்டது. அதன்படி, ஸ்டாலினுக்கு, ஐந்து ஆண்டுகளில் அசையும் சொத்து மதிபபு, 4 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. துர்காவுக்கு, 75 ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளது.



அசையா சொத்துகள்


அசையா சொத்துகளை பொறுத்தவரை, ஸ்டாலின் வாங்கியது மற்றும் பூர்வீக சொத்துகள் என்ற அடிப்படையில், 3.62 கோடி ரூபாய் காட்டப்பட்டுள்ளது. துர்கா பெயரில், 1.95 கோடி ரூபாய் சொத்துகள் காட்டப்பட்டுள்ளன. கடந்த, 2016ல் தாக்கல் செய்த மனுவில், ஸ்டாலினின் அசையாக சொத்துகளாக, 3.58 கோடி ரூபாய் மதிப்பும்; துர்காவுக்கு, 1.64 கோடி ரூபாய் மதிப்பும் காட்டப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளில், அசையா சொத்துகளின் மதிப்பு, ஸ்டாலினுக்கு நான்கு லட்சம் ரூபாயும்; துர்காவுக்கு, 31 லட்சம் ரூபாயும் அதிகரித்துள்ளது.



5 ஆண்டில் ஏற்றம்


தற்போது, ஸ்டாலினுக்கு அசையும், அசையா சொத்துகளின் மதிப்பு, 8.57 கோடி ரூபாயும்; துர்காவுக்கு, 2.25 கோடி ரூபாயுமாக உள்ளது. 2016ல் ஸ்டாலினுக்கு, 4.40 கோடி ரூபாயும்; துர்காவுக்கு, 1.95 கோடி ரூபாயும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, ஐந்து ஆண்டுகளில், ஸ்டாலின் சொத்து மதிப்பு, 4.17 கோடி ரூபாயும், துர்காவுக்கு, 30 லட்சம் ரூபாயும் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.



47 வழக்குகள்!


ஸ்டாலின் மீது, மொத்தம், 47 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான வழக்குகள், பொது பிரச்னைக்காக போராட்டம் நடத்தியதால் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அஞ்சுகம் குடும்ப அறக்கட்டளை, தயாளு குடும்ப அறக்கட்டளையில், தன் பங்கு சொத்துகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மதுரை - மாடக்குளம், தஞ்சை - அசுரத்திருநல்லுார், திருவாரூர் - காட்டூர் கிராமம், சென்னை - வேளச்சேரி, திருவாரூர் - சன்னிதி தெரு உள்ளிட்ட இடங்களில், வேளாண் நிலம் மற்றும் மனைகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. துர்காவுக்கு, சென்னை - வேளச்சேரி, நாகை - திருவெண்காடு கிராமம், திருவள்ளூர் - நந்தியம்பாக்கம் ஆகிய இடங்களில், சொத்துகள் உள்ளன.



உதயநிதி சொத்து


சென்னை, சேப்பாக்கம் -- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும், ஸ்டாலின் மகன் உதயநிதி, வேட்புமனுவில் சமர்பித்துள்ள சொத்து மதிப்பு: * உதயநிதி பெயரில், 21.13 கோடி ரூபாய் அசையும் சொத்து, 5.37 கோடி ரூபாயில், அசையா சொத்து உள்ளது. மனைவி கிருத்திகா பெயரில், 1.15 கோடி ரூபாய்க்கு அசையும் சொத்து உள்ளது; அசையா சொத்து இல்லை.

* இவர், 2019 - -20க்கான வருமான வரி கணக்கு காட்டியபோது, மொத்த வருமானம், 4.89 லட்சம் ரூபாய்; மனைவியின் வருமானம், 17.44 லட்சம் ரூபாய் என, குறிப்பிட்டுள்ளார்.
* கல்வி தகுதியாக, சென்னை லயோலா கல்லுாரியில், இளங்கலை வணிகவியல் படித்து உள்ளதாகவும், சினிமா தொழில் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். அவர் மனைவி, தனியார் நிறுவன பணியாளராக ஊதியம் பெறுகிறார்.
* சென்னை, ராயப்பேட்டை, பீட்டர்ஸ் சாலையில், 811 சதுர அடி வீடு; பள்ளிகரணையில், 1,407 சதுர அடி வீடு; வேளச்சேரியில், 2,400 சதுர அடி காலி மனை உள்ளது.
* திருவள்ளுவர் மாவட்டம், சுங்குவார் சத்திரத்தில், நான்கு இடங்களில் சேர்த்து மொத்தமாக, 10.47 ஏக்கர் நிலம் உள்ளது.
* தங்க நகைகள் எதுவுமில்லை; மனைவியிடம், 55.04 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 1.6 கிலோ பழைய தங்க நகைகள் உள்ளன.
* அவரிடம் உள்ள, ரேஞ்ச் ரோவர் காரின் கொள்முதல் விலை, 1.77 கோடி ரூபாய்; கையிருப்பாக, 75 ஆயிரம் ரூபாய்; மனைவியிடம், 50 ஆயிரம் ரூபாய் உள்ளது.
* அரசியல் போரட்டங்களில், சட்டத்தை மீறியதாக மீது, 22 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.



துரைமுருகன்


தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகனுக்கு, 33 கோடி ரூபாய்க்கு சொத்து உள்ளது. கடந்த தேர்தலை விட தற்போது, 5.83 கோடி ரூபாய்க்கு சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.

வேலுார் மாவட்டம், காட்பாடி தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் துரைமுருகன், நேற்று வேட்பு மனு தாக்கலின்போது, அளித்துள்ள சொத்து விபரம் வருமாறு: அசையும், அசையா சொத்துகள் என, துரைமுருகனுக்கு மொத்த சொத்து மதிப்பு, 33 கோடியே, 14 லட்சத்து, 34 ஆயிரத்து, 807 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடன் கிடையாது. ஜி.எஸ்.டி., வரி பாக்கி இல்லை.

தொழில் வியாபாரம், பூர்விக சொத்தால், மனைவிக்கு வருமானமும், தனக்கு சட்டசபை உறுப்பினருக்கான மாத சம்பளமும் வருகிறது. தன் பெயரில் எட்டு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக, சொத்து பட்டியலில் குறிப்பிட்டுள்ளார். கடந்த, 2016ம் ஆண்டு தேர்தலில், துரைமுருகன் தாக்கல் செய்த பட்டியலில், மொத்த சொத்து மதிப்பு, 27 கோடியே, 30 லட்சத்து, 75 ஆயிரத்து, 100 என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது, தாக்கல் செய்துள்ள சொத்து பட்டியலோடு ஒப்பிடும்போது, 5 கோடியே, 83 லட்சத்து, 59 ஆயிரத்து, 707 ரூபாய் மதிப்புக்கு அவரது சொத்துகள் உயர்ந்துள்ளன.

ad

ad