புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மார்., 2021

இந்தியாவில் சொத்து அதிக சாதனை 177கோடி கமலுக்கும் அவரது கட்சி மகேந்திரனுக்கும்

www.pungudutivuswiss.comஇந்தியாவில் சொத்து அதிக சாதனை 177கோடி கமலுக்கும் அவரது கட்சி மகேந்திரனுக்கும் நாம முடியாத சொத்து மதிப்பு சாதனையில் கமல்
கமல்ஹாசன் சொத்து177கோடி
தினகரன், கமல் ஆகியோருக்கு எவ்வளவு சொத்து மதிப்பு
தினகரன் சொத்து ரூ.12 கோடி அரசுக்கு ரூ.51 கோடி நிலுவைகோவில்பட்டி அ.ம.மு.க., வேட்பாளர் தினகரன் சொத்து விபரங்கள் வருமாறு:அசையும் சொத்து, 19 லட்சத்து, 18 ஆயிரத்து, 485 ரூபாய். அசையா சொத்தாக, 57 லட்சத்து, 44 ஆயிரம் ரூபாய் உள்ளது. தினகரனின் மனைவி அனுராதாவிடம் அசையும் சொத்தாக, 7 கோடியே, 66 லட்சத்து 76 ஆயிரத்து 730, அசையா சொத்தாக, 2 கோடியே, 43 லட்சத்து, 76 ஆயிரத்து 317 உள்ளது.



latest tamil news




மகள் ஜெயஹரிணி பெயரிலான சொத்து விபரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. மொத்தம், 12.26 கோடி ரூபாய்க்கு சொத்துகள் உள்ளன. மேலும், தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கில் விதிக்கப்பட்ட, 28 கோடி அபராதம் உள்பட, 51 கோடியே 32 லட்சத்து 17 ஆயிரத்து 403 ரூபாய், அரசுக்கு நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கமலுக்கு ரூ.177 கோடி சொத்து; 50 கோடி கடன்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், தனக்கு, 177 கோடி ரூபாய்க்கு சொத்துகளும், 50 கோடி ரூபாய்க்கு கடனும் இருப்பதாக தெரிவித்துள்ளார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் அவர் தாக்கல் செய்துள்ள சொத்து விபரம்:  சென்னை, ஆழ்வார்பேட்டையில் வசிக்கிறேன். எட்டாம் வகுப்பு படித்திருக்கிறேன். என் மீது மூன்று வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. கையிருப்பு, வங்கிகள் டிபாசிட் என, மொத்தம், 2 கோடியே, 43 லட்சத்து, 84 ஆயிரத்து, 563 ரூபாய்.
 பங்குகள் மற்றும் முதலீட்டு பத்திரங்களாக, 26.11 கோடி, போஸ்டல், இன்சூரன்ஸ் பாலிசி உள்ளிட்ட வகையில், 2.40 கோடி, தனி நபர் கடன், அட்வான்ஸ், அறக்கட்டளை உள்ளிட்டவற்றில், 36.25 கோடி ரூபாய் இருப்பு.

 அசையும் சொத்துகளின் மொத்த மதிப்பு, 45.09 கோடி.

 அசையா சொத்துகள் பட்டியலில், கொடைக்கானல், விளாப்பட்டி கிராமத்தில், 35.59 ஏக்கர் விவசாய நிலம் மதிப்பு, 17.80 கோடி. ஆழ்வார்பேட்டையில் மூன்று பிளாட் மதிப்பு, 2.50 கோடி ரூபாய், ரங்கநாதன் அவென்யூ பிளாட், 17 கோடி என, மொத்தம், 19.50 கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்து; லண்டனில், டவர் பிரிட்ஜ் ரோட்டில், 2.50 கோடி மதிப்புக்கு, 500 சதுர அடி கட்டடம், இணை சொத்து உள்ளது.

 ஆழ்வார்பேட்டை, எல்டாம்ஸ் ரோட்டில், 10,914 சதுரடி இடத்தில், 9,002 சதுரடியில் உள்ள கட்டடத்தின் மதிப்பு, 24.84 கோடி. டி.டி.கே., ரோட்டில், 23 ஆயிரம் சதுரடிக்கு உள்ள கட்டடத்தின் மதிப்பு, 45.18 கோடி.

 சென்னை, உத்தண்டி கிராமத்தில், 6,382 சதுரடிக்கு ஒரு பிளாட், மதிப்பு, 3.05 கோடி. சோழிங்கநல்லுார், எல்காட் அவென்யூவில், 17,040 சதுரடியில் கட்டடத்தின் மதிப்பு, 19 கோடி என, மொத்தம், 92.05 கோடி.

 வீட்டு கடன், அடமான கடன், இன்சூரன்ஸ் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் உள்ள கடன், 33.16 கோடி, தனியாருக்கு கொடுக்க வேண்டியது, 15.33 கோடி உட்பட மொத்தமுள்ள கடன், 49.50 கோடி.

 கரூர், அரவக்குறிச்சி, துாத்துக்குடி தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் என மூன்று வழக்குகள் உள்ளன.

கமல்ஹாசன் அசையா சொத்து மதிப்பு - 131 கோடியே, 84 லட்சத்து, 45 ஆயிரம் ரூபாய். அசையும் சொத்து மதிப்பு - 45 கோடியே, 9 லட்சத்து, ஆயிரத்து, 476 ரூபாய் என, மொத்தம் - 176 கோடியே, 93 லட்சத்து, 46 ஆயிரத்து, 476 ரூபாய். கடன் தொகை - 49 கோடியே, 50 லட்சத்து, 11 ஆயிரத்து, 10 ரூபாய்.
மகேந்திரன்
சிங்காநல்லுார் தொகுதியில் போட்டியிடும், ம.நீ.ம., வேட்பாளர் மகேந்திரனுக்கு, 159.63 கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளன .




சீமான்
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், அவரது மனைவி பெயரில், 1.25 கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளன. 'இவ்வளவு சொத்துக்கள் தான் எங்களிடம் உள்ளன' என, வி.ஐ.பி., வேட்பாளர்கள், தங்கள் வேட்புமனுவில் கணக்கு காட்டியுள்ளனர்.

ad

ad