புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 செப்., 2025

www.pungudutivuswiss.com
உயிரிழந்த சட்டத்தரணி வீட்டில் வகை வகையாக துப்பாக்கிகள்!- பொலிஸ் அதிர்ச்சி.
[Saturday 2025-09-20 15:00]


இரத்தினபுரி, கொலுவாவிலவத்தையில் உள்ள வீட்டிலிருந்து  பல வகையான துப்பாக்கிகளை இரத்தினபுரி பொலிஸார் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

இரத்தினபுரி, கொலுவாவிலவத்தையில் உள்ள வீட்டிலிருந்து பல வகையான துப்பாக்கிகளை இரத்தினபுரி பொலிஸார் அதிகாரிகள் மீட்டுள்ளனர்

குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்தபோது திடீரென மாரடைப்பால் 73 வயது சட்டத்தரணி உயிரிழந்துள்ளார்.

இரத்தினபுரி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த 17ஆம் திகதி சசட்டத்தரணியின் வீட்டை சோதனை செய்தபோது பல துப்பாக்கி பாகங்கள் மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதில், போர் 12 ரக துப்பாக்கி ஒன்று, ரிப்பீட்டர் வகை துப்பாக்கி ஒன்று, போர் 12 ரக துப்பாக்கிகளின் 6 பாகங்கள், டபிள் பரல் துப்பாக்கிகள், 2 சிறிய துப்பாக்கிகள், போர் 12 மற்றும் 16 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 440 புதிய தோட்டாக்கள் உட்பட பல துப்பாக்கிகள் மற்றும் அவற்றின் பாகங்கள் அடங்கியுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தத் துப்பாக்கிகள் சில குற்றச் செயல்களுக்காக வழங்கப்பட்டதா என்பதையும், இவற்றுடன் மேலதிக துப்பாக்கிகள் சில குழுக்களுக்கு வழங்கப்பட்டதா என்பதையும் கண்டறிய விசாரணைகள் நடைபெறுவதாக இரத்தினபுரி தலைமையக பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன சுமனசிறி கூறினார்.

இத்துப்பாக்கிகளில் பல இலங்கையில் தயாரிக்கப்பட்டவை என்று சந்தேகிக்கப்படுவதால், அவை குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ad

ad