-

8 ஜன., 2026

முதலில் அமெரிக்க படையை சுடுவோம்- அப்புறம் பேசுவோம் டென்மார் பதிலடி !

www.pungudutivuswiss.com
"கிரீன்லாந்து மீது அமெரிக்கா கை வைத்தால், நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்" என்று டென்மார்க் பாதுகாப்பு அமைச்சகம் (Danish Defence Ministry) உலகத்தையே அதிரவைக்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 1952-ம் ஆண்டு போடப்பட்ட ஒரு ரகசிய ராணுவ விதியின்படி (1952 Rule), நாட்டின் எல்லைக்குள் அன்னியப் படைகள் அத்துமீறி நுழைந்தால், மேல் அதிகாரிகளின் உத்தரவுக்காகக் காத்திருக்காமல் 'உடனடியாகத் தாக்குதல்' (Immediately attack) நடத்த வேண்டும் என்பது இப்போதும் அமலில் இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளனர். அதாவது, அமெரிக்கப் படைகள் கிரீன்லாந்தில் காலடி எடுத்து வைத்தால், டென்மார்க் ராணுவம் 'முதலில் சுடும், அப்புறம் தான் விசாரிக்கும்'. இது ஒரு 'quasi-invasion' சூழலாக மாறினால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்!
அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), கிரீன்லாந்தை எப்படியாவது அமெரிக்காவோடு இணைத்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார். "கிரீன்லாந்தை வாங்குவது அல்லது அதன் பாதுகாப்பை மொத்தமாகக் கையில் எடுப்பது ஒரு 'National Security Priority'" என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. "ராணுவத்தைப் பயன்படுத்துவது எப்போதுமே எங்களிடம் இருக்கும் ஒரு வழிமுறை (Always an option)" என்று ட்ரம்ப்பின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் (Karoline Leavitt) மிரட்டல் விடுத்துள்ளார். ஆர்க்டிக் பகுதியில் சீனா மற்றும் ரஷ்யாவின் ஆதிக்கம் அதிகரிப்பதைத் தடுக்க கிரீன்லாந்து தங்களுக்குக் கட்டாயம் தேவை என்பது ட்ரம்ப்பின் வாதம்
இந்த விவகாரம் இப்போது 'நேட்டோ' அமைப்பையே இரண்டாகப் பிளக்கும் நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. "அமெரிக்கா ஒரு நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால், நேட்டோ என்பது அங்கேயே முடிவுக்கு வந்துவிடும்" என்று டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் (Mette Frederiksen) எச்சரித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer) மற்றும் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளும் டென்மார்க்கிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளன. ஒரு 'NATO Ally' மற்றொரு நேட்டோ நாட்டைத் தாக்க முற்படுவது, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய உலகப் பாதுகாப்பையே (Post-WWII Security) கேள்விக்குறியாக்கியுள்ளது.
அமெரிக்கா இப்படித் தனது நட்பு நாடுகளையே மிரட்டுவது ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் சாதகமாக அமைந்துவிடும் எனப் பாதுகாப்பு நிபுணர்கள் (Analysts) கருதுகின்றனர். "யாருடைய மிரட்டலுக்கும் பணிய மாட்டோம், கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல" என்று டென்மார்க் திட்டவட்டமாகக் கூறிவிட்டது. ஒருவேளை ட்ரம்ப் சொன்னது போல அமெரிக்கப் படைகள் உள்ளே நுழைய முயன்றால், அது ஒரு மிகப் பெரிய உலகப் போருக்கு (Global Conflict) வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை. அட்லாண்டிக் கடலில் ஒரு பக்கம் எண்ணெய் கப்பல் பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்க, இப்போது ஆர்க்டிக் கடலில் இந்த 'கிரீன்லாந்து' போர் மேகம் உலகையே பீதியில் ஆழ்த்தியுள்ளது!

ad

ad