விளம்பரம்
சிறுமி ஒருவரை தாகாத நடத்தைக்கு உட்படுத்திய அநுராதபுர பிரதான விகாரையின் தலைமை விகாராதிபதிக்கு எதிரான வழக்கு நேற்று (15.05.2026) அநுராதபுரம் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குறித்த பௌத்த பிக்கு முன்னிலையாகாத நிலையில் வழக்கு விசாரணைகள் நடைபெற்றன.
சந்தேகநபரான பல்லேகம ஹேமரத்தன பிக்கு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ, சிரேஷ்ட சட்டத்தரணி ரஞ்சித் ராஜகருணா உள்ளிட்ட 20 சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் சார்பில் சட்டத்தரணி பிரதீப் திஸாநாயக்க முன்னிலையானார்.

மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
கைவிடப்பட்ட சிறுமி
ஆனால் தகாத நடத்தைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியின் உரிமைகளுக்காக எந்த வழக்கறிஞரும் அல்லது வேறு எந்த வெளி தரப்பினரும் முன்னிலையாகவில்லை.
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் நீதியை நிலைநாட்டும் பிரிவின் நீதித்துறை பிரதானியாக கடமையாற்றும் சஞ்ஜீவனி அபேகோனின் முயற்சியினாலே தேரருக்கு நீதமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

அதுவரை தேரருக்கு பிடியாணை கூட பிறப்பிக்கப்பட்டிருக்கவில்லை.சட்டத்தரணி சஞ்ஜீவனி அபேகோன் தனது முகநூல் பதிவொன்றில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.'
சட்டத்திற்கு மேல் மதம்-நீதியை விட பணம் முன்னிலையில்' என்று பதிவிட்டிருந்தார்.இந்த சம்பவத்தில் அவ்வளவு அழுத்தம் நீதித்துறைக்கு கொடுக்கப்பட்டுள்ளதையே இந்த குறிப்பு கோடிட்டு காட்டியுள்ளது.
அநுராதபுரம் நீதிமன்ற நீதிபதி சியபத் சசிந்து விக்ரமரத்ன பல்லேகம ஹேமரத்ன தேரேரை 22ஆம் திகதியன்று அநுராதபுரம் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.
சிறுமியின் தாய்க்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
இதற்கிடையில் தனது இளம் வயது மகளை தகாத நடத்தைக்காக சந்தேக நபரான பல்லேகம ஹேமரத்ன பிக்குவிடம் தெரிந்தே ஒப்படைத்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரை எந்தவொரு பிணை நிபந்தனைகளின் பேரிலும் விடுவிக்குமாறு விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
சிறுமியின் தாயாரை இம்மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
