-

30 மே, 2026

பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய உத்தரவு! [Friday 2026-05-29 16:00]

www.pungudutivuswiss.com

கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, சுற்றுலா ஊக்குவிப்பு அதிகாரசபைக்குச் சொந்தமான 7.8 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முன்னாள் தலைவர் பஸ்வர குணரத்ன உள்ளிட்ட பலரைக் கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது.

சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் சந்தேகநபர்கள் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் பெயரிடப்படுவார்கள் என முன்வைக்கப்பட்ட ஆதாரங்களைத் தொடர்ந்து, சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிவான் பசன் அமரசேன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.

சந்தேகநபர்களை அவர்களின் வீடுகளில் வைத்து கைது செய்ய எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்ததாகவும், ஏனெனில் அவர்கள் அங்கு இருக்கவில்லை என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து, நீதிவான் சந்தேகநபர்களுக்கு வெளிநாட்டுப் பயணத் தடையை விதித்ததுடன், இது குறித்து குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும் உத்தரவிட்டார்.

விசாரணைகளின்படி, இந்த நிதியானது ஒருபுறம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவப்படமும், மறுபுறம் அரசியல் கட்சி ஒன்றின் பெயரும் அச்சிடப்பட்ட 12,000 டி-ஷர்ட்டுகளை அச்சிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த டி-ஷர்ட்டுகள் மொனராகலை மாவட்டத்தில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் விநியோகிக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்தது.

ad

ad