“செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் தற்போது கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் கைதி ஒருவர், முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே ஊடாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்திருந்தார். அதற்கு குறித்த கைதிக்கு ‘பொதுமன்னிப்பு’ வழங்குவதாகவும், புதைகுழி தொடர்பான எந்தவொரு விடயத்தையும் வெளியே கூற வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது”. எனவே, செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் உண்மைகளை மூடிமறைக்க நடந்த முயற்சிகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் உரிய விசாரணைகளை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். |