-

10 செப்., 2013

இந்தியாவின் பொதுமன்னிப்புக்காக ஏங்கித் தவிக்கிறார் அமைச்சர் டக்ளஸ்; வல்வெட்டித்துறையில் சரவணபவன் எம்.பி. 
கொலைக் குற்றவாளியாக இந்திய அரசால் தேடப்படும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய மீனவர்களுக்காகக் குரல்கொடுத்தால் தனக்குப் பொது மன்னிப்புக்கிடைக்கும் என்ற நப்பாசையில் நாடகமாடுகிறார்.

“புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்படுவது கருணாநிதிக்கு அறிவிக்கப்பட்டது

“இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் இலங்கை ராணுவத்துக்கு ஏற்படும் முன்னேற்றம் பற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அடிக்கடி கூறப்பட்டது. இறுதி யுத்தத்தில், விடுதலைப் புலிகள்
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை சிந்து  மயங்கி விழுந்தார் ( படங்கள் )
திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகை சிந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றார்.  
நடிகர் பரத் திருமண வரவேற்பு

பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் பரத், இதுவரை 23 படங்களில் நடித்துள்ளார்.பரத்திற்கும் துபாயை சேர்ந்த ஜோஸ்வா – ஜெஸ்ஸி ஆகியோரின்
சென்னையில் இந்திய சினிமா நூற்றாண்டு பிரமாண்ட விழா :
4 மாநில முதல்வர்கள் நடிகர், நடிகைகள் கலந்துகொள்கிறார்கள்
இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கே, கடந்த 1913–ம் ஆண்டு மே மாதம் 3–ந் தேதி அன்று ‘ராஜா அரிச்சந்திரா’ என்ற படத்தை வெளியிட்டார்.
திண்டிவனம் : தேமுதிக –வி.சிறுத்தை கோஷ்டி மோதல்
திண்டிவனம் அருகே உள்ள முன்னூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ். தே.மு.தி.க. தொண்டர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தமிழரசிக்கும் நேற்று முன்தினம்
ஈகப்பேரொளி செந்தில்குமரனின் இறுதி வேண்டுகோள் - (ஒலி வடிவம்)
கடந்த செப்டம்பர் 5ம் நாள் ஐ.நா முன்றலில் வீரத்தமிழ் மகன் ஈகப்பேரொளி செந்தில்குமரன் அவர்கள் தமிழினத்தின் விடுதலைக்காக தன்இன்னுயிரை ஈய்ந்தார்.
தீயில் ஆகுதியான வீரத் தமிழன் செந்தில்குமரனுக்கு சுவிஸில் இடம்பெற்ற வணக்க நிகழ்வுகள்
ஈழத்தமிழர்களின் விடியலுக்காக தீயினில் தன்னையே ஆகுதியாக்கிய வீரத்தமிழ் மகன் இரட்ணசிங்கம் செந்தில்குமரனன் நினைவு சுமந்த வணக்க ஒன்றுகூடல் நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் அமைந்துள்ள முருகதாசன் திடலில் நடைபெற்றது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் குறுகிய கால ஏற்பாட்டில், பிற்பகல் 3 மணி முதல் 5.30 மணி வரை நடைபெற்ற இவ்வணக்க நிகழ்வில், சுவிசின் பல பாகங்களிலிருந்தும் கனத்த இதயங்களுடன் மக்கள்
இனப்படுகொலை நடந்த இலங்கையில் கொமன்வெல்த் மாநாடா?: திருச்சியில் இருந்து சென்னைக்கு மாணவர்கள் சைக்கிள் பேரணி
“இனப்படுகொலை இலங்கையே”, “இலட்சம் தமிழரின் பிணக்குவியல் மீது கொமன்வெல்தா” என்ற முழக்கத்துடன் கொன்று குவிக்கப்பட்ட ஈழ உறவுகளுக்கும் சீரழிக்கப்பட்ட நம் சகோதரிகளிற்கும் நீதிகேட்டு திருச்சியில் இருந்து சென்னை நோக்கி மாணவர்கள் சைக்கிள் பேரணி நடத்த உள்ளனர்.



"அவர்களுக்கென்ன...
மகாராணிகள்!'


நடிகைகளின் வசதிகளையும், வாய்ப்பு களையும், புகழ் வெளிச் சத்தையும் பார்த்து ஈஸியாக சொல்லிவிடலாம்!



விஜய்யை வைத்து படம் தயாரித்தவர்கள் பலரும் தாணு அணியில் இருப்பதாலும், எஸ்.ஏ.சி. ஆதரிப்பதாலும் தாணு அணி "விஜய் ஆதரவு பெற்ற அணி'யாகவும், சூர்யாவின் கஸின் பிரதர் ஞானவேல்ராஜா, கேயார் அணியில்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதால் கேயார் அணி "சூர்யாவின் ஆதரவு பெற்ற அணி'யாகவும் வர்ணிக்கப்படுகிறது.

         "காய்'’ விட்டுக்கொள்ளும் சூரியன், மாம் பழம் தலைமைகள், ஒன்றுபோல ஆகி இருக் கின்றன; என்ன கதை இது? அம்மை ஆட்சியின் ஊழல் விவ(கா)ரங்களைத் தோண்டி, மக்கள் மன்றத்தில் வைக்க, கட்சியினரைத் தயார் செய்கிறது, மாம்பழத் தலைமை. இதேபோல,



               ""ஹலோ தலைவரே... பிரதமராகும் கனவில் இருக்கும் ஜெ., அதற்கு அணைபோடுற மாதிரி இருக்கிற இந்த சொத்துக் குவிப்பு வழக்கு எப்படியாவது சீக்கிரமா முடியணும்னும் தனக்கு சாதகமான தீர்ப்பு வரணும்னும் எதிர்பார்ப்போடு இருப்பதைப் பற்றி நம்ம நக்கீரனில் டீடெய்லா எழுதியிருந்ததைப் படிச்சிருப்பீங்க..''


           புதுவை மாநில ரவுடிகளின் அட்ட காசங்களைப் பற்றி ’ஆக. 31-செப் 3’ தேதியிட்ட நக்கீரனில் "ரவுடிகளுக்கு முதல்வரா?' என்ற தலைப்பில் ஹாட் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். நமது செய்தியை பார்த்த புதுவை மாநில வியாபாரிகள் அங்கங்கே கூடினர். "இந்த அரசாங்கம் நமக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும், நக்கீரன் பத்திரிகை நமக்கு


           வ்வொரு எம்.பி. தேர்தல் நெருங்கும்போதும் டெல்லியின் பார்வை தமிழகத்தின் மீது அழுத்தமாகப் பதிவது வழக்கம்தான். காங்கிரஸ் கட்சி கழுகுப் பார்வையோடு தமிழ்நாட்டைப் பார்க்கிறது என்று நம்மிடம் சொன்ன அந்த கர்நாடக எம்.பி (நடிகை குத்து ரம்யா அல்ல),


அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியை தோற்கடித்து லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவின் நாடாளுமன்றத்துக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது.
திரு இரத்தினசிங்கம் செந்தில்குமரன்
பிறப்பு : 13 பெப்ரவரி 1978 — இறப்பு : 5 செப்ரெம்பர் 2013

புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ்சை வசிப்பிடமாகவும் கொண்ட ஈகைப்பேரொளி இரத்தினசிங்கம் செந்தில்குமரன் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
அன்னாரின் வீரவணக்கநிகழ்வு 11-09-2013 புதன்கிழமை அன்று மதியம் 12:00 தொடக்கம் 17:00 வரை Halle Polyvalente Rue de l’industrie 11 1964 Conthey எனும் முகவரியில் நடைபெறும்.
தகவல்
வலேதமிழ் சங்கம்
தொடர்புகளுக்கு
க.சிவலோகநாதன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41786629306
இலங்கைத்தீவுக்கான ஐ.நா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்களது பயணத்தினை தொடர்ந்து இன்று தொடங்கிய ஐ.நா மனித உரிமைச்சபையின் 24வதுகூட்டத் தொடர் தமிழர்பரப்பில் பெரும் எதிர்பார்ப்பினைத் தோற்றுவித்திருந்தது. வீடியோ 
இன்று தொடங்கிய கூட்டத் தொடரில் தற்காலத்தில் அனைத்துலக அரசியல் அரங்கில் பேசுபொருளாகவுள்ள சிரியா மற்றும்எகிப்து ஆகிய நாடுகளின் விவகாரமே பெரும்பாலான நாடுகளின் கவனத்தினை பெற்றிருந்தாலும் , சிறிலங்கா விவகாரமும் அமெரிக்கா ஜேர்மனி ஒஸ்றியா

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளில் 107 பேர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய சமூகத்துடன் இன்று இணைக்கப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு வெலிகந்தை, பூந்தோட்டம் ஆகிய தடுப்பு முகாமில் புனர்வாழ்வு பெற்றவர்களே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தாயகத்துக்காக மரணித்த செந்தில் குமரனுக்கு விடுதலைபுலிகளின் மதிப்பளிப்பு 

ஜெனீவாவில் ஐ நா முன்றலில் இன்று மாலை நடைபெற்ற வீர வணக்க நிகழ்வில் ஈகை பேரொளி என்னும் மதிபளிக்கப்பட்டது

ஒடுக்கப்பட்ட தமிழ் இனத்திற்கு இலங்கை அரசாங்கத்திடமிருந்து நீதி கிடைக்கச்செய்வதில் ஜ.நாவின் தலையீடு அவசியம் என்பதையும் சர்வதேசம் தமிழர்களிற்கான நீதியினை பெற்றுத்தரவேண்டும் என்பதனையும் வலியுறுத்தி ஈகைப்பேரொளி முருகதாசன் வழியில் செந்தில்குமரனும் தமிழினத்தின் சார்பாக தீயில் வெந்தான் என்ற வரலாறும் தமிழின விடுதலைக்கு வலுச்சேர்க்கட்டும்.
சிறீலங்கா அரசின் திட்டமிட்ட தமிழினவழிப்பால் சிறுவயதிலேயே புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வந்த ரட்ணசிங்கம் செந்தில்குமரன் அவர்கள், அனைத்துலகம் தமிழ்மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தராத நிலையில்; ஐ.நா முன்னிலையிலேயே 05.09.2013 அன்று தன்னுயிரைத் தீயிட்டு ஈகம் செய்துள்ளார் .
திருமணமாகி மூன்று பிள்ளைகளின் தந்தையுமான ரட்ணசிங்கம் செந்தில்குமரன் அவர்கள் தமிழீழ மண்ணில் தமிழினம் விடுதலைபெற்று வாழவேண்டுமென்ற அரசியல் தெளிவோடு உறுதியான இலட்சியத்துடனவாழ்ந்தவர். அத்துடன் விடுதலையை விரைவில் வென்றெடுக்கவென  புலம்பெயர் தேச கவனயீர்ப்புப் போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டவர்.
குறிப்பாக ஐ.நாவின் மனித உரிமைகள் கண்காணிப்பக உயர் ஆணையாளர் அவர்களின் சிறீலங்கா, மற்றும் தமிழர் தாயகப் பகுதிகளுக்கான பயணத்தையடுத்து தன்னையே தீயிட்டுள்ளமை  என்பது ஐ.நா தன் பொறுப்பை உணரவும் இலங்கையின் சிங்கள இனவெறி அரசு ஈழத்தமிழர்கள் மீது நடத்திய இனப்படுகொலைத் தாக்குதல்கள், மனித உரிமைகள் அழிப்புக் குற்றங்கள் குறித்து சர்வதேசம் தமிழ்மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தரவும் வேண்டுமென்ற கருத்தையே தனது உயிர்த்தியாகத்தின் ஊடாக வலியுறுத்திக் கூறியுள்ளார்.
அத்துடன் தாயகத்தில் குரல்வளைகள் நசுக்கப்பட்ட நிலையில் தமிழ்மக்களின் பெருவிருப்பான தமிழீழ விடுதலையை வென்றெடுப்பதற்காக புலம்பெயர் மக்கள் உறுதியுடன் தொடர்ந்தும் போராடவேண்டும் என்ற செய்தியையும் எமக்கு  வலியுறுத்தியுள்ளார்.
இவரின் பிரிவால் துயருறும் துணைவியார், பிள்ளைகள், பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களின் துயரில் பங்கேற்று நிற்பதுடன்,தன்னின விடுதலைக்கெனத் தன்னுயிரை ஈகம் செய்த ரட்ணசிங்கம் செந்தில்குமரன் அவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வீரவணக்கத்தைச் செலுத்துவதுடன் “ஈகைப்பேரொளி” என மதிப்பளிக்கின்றது.
முருகதாசன் விட்டுச்சென்ற கோரிக்கைக்கு ஐ.நா நீதி வழங்காத நிலையில் செந்தில்குமரனும் தனது  கோரிக்கையையும் முன்வைத்துச் சென்ற இவ்வேளையில், மேலும் இவ்வாறான இழப்புக்கள் தொடர்வதற்கான சூழமைவு ஏற்படாதவாறு எமது செயற்பாடுகளை புத்தெழுச்சியுடன் வேகம் கொண்டு  முன்னெடுப்போம் என அனைத்துத் தமிழ்மக்களும் உறுதியெடுத்து, தமிழீழ விடுதலை நோக்கிய பயணத்தைத்தொடர்வோம்.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

ad

ad