ஐந்து மாணவர்கள் கடத்தல்! சட்டமா அதிபர் வழக்கில் இருந்து திடீர் விலகல்
ஐந்து மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக இடம்பெறும் வழக்கு விசாரணையில் கடற்படைத் தளபதிக்கு சார்பாக சட்டமா அதிபர் ஆஜரானமைக்கு சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
தெகிவளையில் 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி ஐந்து மாணவர்கள் கடத்தப்பட்டதையடுத்து மாணவர்களின் பெற்றோர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
