புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2014

தமிழகத்தில் 5 முனை போட்டியால் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே கட்சிகளின் வெற்றி அமையும் ஒரே ஒரு வாக்கு கூட வெற்றியை நிர்ணயிக்கலாம்

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 5 முனைபோட்டி உருவாகியுள்ளது. இதனால் குறைந்த வாக்குவித்தியாசத்திலேயே கட்சிகளின் வெற்றி–தோல்வி அமைய இருக்கிறது.

2009–ம் ஆண்டு தேர்தல்
கடந்த பாராளுமன்ற தேர்தலில் (2009) தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் இடம் பெற்றிருந்தன. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியும், பா.ஜ.க. கூட்டணியில் சிறிய கட்சிகளும் இடம் பெற்று இருந்தன. தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டது. 4 முனை போட்டி நிலவியது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 12 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 27 இடங்களிலும் வெற்றி பெற்றது. தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க. எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை என்றாலும், பெருவாரியான வாக்குகளை பெற்றிருந்தது. இதனால் பல தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சிக்கும் அடுத்து இடம் பிடித்த கட்சிக்கும் இடையே வாக்கு வித்தியாசம் மிக குறைவாகவே இருந்தது.
வெற்றி சதவீதம் குறைந்தது ஏன்?
குறிப்பாக, விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே(0.25 சதவீதம்) வெற்றி பெற முடிந்தது. தேனியில் காங்கிரஸ் வேட்பாளர் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றார்.
அதேபோல், திருச்சியில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் குமார், வட சென்னையில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், விருதுநகரில் போட்டியிட்ட மாணிக்தாகூர், காஞ்சீபுரத்தில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன், சிவகங்கையில் நிதிமந்திரி ப.சிதம்பரம் ஆகியோர் வெகு குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற முடிந்தது. இதற்கு பல முனை போட்டி உருவானதே காரணமாக கூறப்பட்டது.
ஒரே ஒரு ஓட்டு தீர்மானிக்கும்
2009–ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலை விட தற்போது 5 முனை போட்டி உருவாகியுள்ளது. அ.தி.மு.க. தனி அணியாகவும், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஒரு அணியாகவும், பாரதீய ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. ஒரு அணியாகவும், தேசிய கட்சிகளான காங்கிரஸ் ஒரு அணியாகவும், கம்யூனிஸ்டு கட்சிகள் ஒரு அணியாகவும் என 5 முனை போட்டி உருவாகியுள்ளது.
இதனால் கட்சிகளின் வாக்குகள் வெகுவாக பிரியும் நிலை உருவாகியுள்ளது. குறைந்த சதவீத வாக்குகளே வெற்றி–தோல்வியை நிர்ணயிக்க இருக்கிறது. இதனால் வாக்குகளை சிதறாமல் பார்த்துக்கொள்வதற்காக ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தற்போது தீவிர பிரசாரம் மேற்கொண்டு உள்ளனர்.
‘ஒரே ஒரு வாக்கு’ கூட வெற்றி–தோல்வியை நிர்ணயிக்கும் நிலை இந்த தேர்தலில் உருவாகலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
இளைய தலைமுறையினர்...
கட்சி ஆதரவாளர்களை தாண்டி, பொதுவாக்காளர்களே வெற்றியை நிர்ணயிக்க இருக்கிறார்கள். அதிலும் புதியதாக வாக்களிக்க இருக்கும் இளைய தலைமுறையினரே மத்தியில் ஆட்சி அமைக்கிறவர்களை நிர்ணயிக்கும் சக்தி படைத்தவர்களாக உருவாகியிருக்கிறார்கள் என்றால் அதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இதனால் இந்த தேர்தல் எந்த விதத்திலும் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காது.

ad

ad