புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2014

கொழும்பு பல்கலைக்கழகத்தின் இரு பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டன

* பெண்கள் விடுதியில் சிரேஷ்ட மாணவர்கள் தகாத செயற்பாடு
* 8 மணிக்கு முன் மாணவர்களை வெளியேற உபவேந்தர் உத்தரவு
உபவேந்தர் ஹிரிதுபுரேகம
கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கல்விப் பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டிருப்பதாக
கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி குமார ஹிரிதுபுரேகம தெரிவித்தார்.
இந்த இரண்டு பீடங்களையும் சேர்ந்த விடுதிகளிலுள்ள மாணவர்கள் இன்று காலை 8 மணிக்கு முன்னர் விடுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என்றும், இரண்டு பீடங்களுக்குள் மாணவர்கள் செல்வது தடை செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
தெலவல பெண்கள் விடுதியில் சிரேஷ்ட மாணவர்கள் தகாத முறையில் நடந்துகொண்ட சம்பவத்தைத் தொடர்ந்தே இரண்டு பீடங்களையும் மூடுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்ததாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த உபவேந்தர் கூறினார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், கலை மற்றும் கல்விப் பீடங்களுக்குத் தெரிவான முதலாமாண்டு மாணவர்களை தெலவல பெண்கள் விடுதியில் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் நேற்றுக் காலை இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது, விடுதிக்குள் புகுந்த 60ற்கும் அதிகமான சிரேஷ்ட மாணவர்கள், பல்கலைக்கழக அதிகாரிகளை அச்சுறுத்தியதுடன் தகாத வார்த்தைகளால் அதிகாரிகளை தூஷித்தனர்.
தெலவலப்பிட்டிய விடுதி புதிதாகப் புனரமைக்கப்பட்டு மாணவர்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கை நடை பெற்றுக்கொண்டிருந்தது. இதன்போதே சிரேஷ்ட மாணவர்கள் புதிய மாணவர்களையும் அவர்களின் பெற் றோரையும் குழப்பி இவ்வாறான வெறுக்கத்தக்க நடவடிக்கையில் ஈடுபட்டனர். கட்டட வேலைகளுக்கும் அவர்கள் சேதம் விளைவித்துள்ளனர்.
இலவசக் கல்வி மற்றும் பல்கலைக்கழக கல்வி முறையைக் குழப்பி மாணவர்களை வீதிக்கு இறக்கி அவர்களின் எதிர்காலத்தை நாசமடையச் செய்யும் நோக்குடன் இயங்கிவரும் வெளி சக்திகளின் தூண்டுதலின் பெயரிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது மிகவும் மோசமான நிலை. இதனைத் தொடரவிட்டால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடும். இதனால் தான் இரண்டு பீடங்களையும் தற்காலிகமாக மூடுவதற்குத் தீர்மானித் துள்ளோம்.
இந்த சம்பவத்தை நாம் ஒரு பாரதூரமான சம்பவமாகவே பார்க்கின்றோம். இது பல்கலைக்கழ கத்துக்கு எதிரான நடவடிக்கை அல்ல. நாட்டுக்கு எதிரானதொரு சக்தியாகவே பார்க்கின்றோம். குழப்பத்தில் ஈடுபட்டவர்கள் விடுதிக் கட்டணம் குறைக்கப்பட வேண்டும், மலசலவசதிகள் ஒழுங்காக இல்லை போன்ற விடயங்களை முன்வைத்தனர். எனினும் அவர்கள் முன்வைத்த விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. விடுதிக் கட்டணம் கடந்த ஒன்றரை வருடங்களாகக் கூட்டப் படவில்லை. இது கல்விச் செயற் பாடுகளைக் குழப்பும் நடவடிக்கையே என்றார்.

ad

ad