புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2014


7 பேரை விடுதலை செய்ய ஜெயலலிதா பரிந்துரை : மத்திய உள்துறை அமைச்சர் பதில்
ராஜீவ்காந்த் கொலை வழக்கில் பேரரிவாளன், சாந்தனு முருகன், நளினி உட்பட 7 பேர் கடந்த 23 ஆண்டு களாக சிறையில் இருந்தனர். இந்நிலையில் பேரரிவாளன். சாந்தனு மற்றும் முருகனின் கருணை மனுக்களை தாமதமாக பரிசீலித்தாக
கூறி, இவர்களது மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததது.


மேலும் குற்றவியல் நடைமுறை சட்டப்படி விடுதலை குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்றும் தீர்ப்பளித்தது. இதனையடுத்து இன்று அமைச்சரவையை கூட்டி முதல்வர் ஜெயலலிதா ஆலோசித்தார். அப்போது ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருந்து வரும் 7பேரையும் விடுதலை செய்யலாம் என்று முடிவெடுத்து அறிவித்தார்.  மத்திய அரசுக்கும் பரிந்துரை செய்தார்.  மூன்று நாட்களுக்குள் விடுதலை செய்யாவிட்டால், தமிழக அரசே விடுதலை செய்யும் என்று அதிரடியாக அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  காங்கிரசார் வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் ஜெயலலிதாவின் முடிவிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி,  ‘’பிரதமரை கொன்றவர்களையே தண்டிக்காமல் விடுவிப்பது எப்படி சரியாகும்?  சாதாரண மனிதர்கள் பாதிக்கப்படும்போது எப்படி நீதி கிடைக்கும்?  ராஜீவ்காந்தி என் தந்தை என்பதற்காக கூறவில்லை.  நாட்டிற்காக சொல்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். 
 ஜெயலலிதாவின் முடிவு பொறுப்பற்ற விபரீதமன மக்கள் நலன் சாரா செயல் என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ’’மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசின் கடிதம் இதுவரை வரவில்லை.  கடிதம் வந்த பின்னரே 7 பேரை விடுவிப்பது தொடர்பாக முடி வு எடுக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

ad

ad