புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 பிப்., 2014

இலங்கைத் தரப்பை பதற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கும் இரசாயன ஆயுதங்கள் பற்றிய ஆவணப்பட குற்றச்சாட்டு
கடந்த ஜனவரி 31 பெப்ரவரி 1 ம் தேதிகளில் லண்டனில் பிரித்தானிய தமிழர் பேரவை சார்பாக 'இலங்கை நடைபெறும் நில அபகரிப்பை பற்றிய சர்வதேச மாநாடு' நடைபெற்றது.

இதில் மேதா பட்கர், நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் டெனிஸ் ஹலேடெய் உட்பட உலகளவில் பல்வேறு தரப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் அண்மையில் இலங்கையில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட பத்திரிகையாளர் மகா.தமிழ்ப் பிரபாகரனும் கலந்து கொண்டு தனது ஆவணப்படத்தை வெளியிட்டார்.
இந்த ஆவணப்படத்தில் வெளியானவைகள் இப்பொழுது இலங்கைத் தரப்பை பதற்றத்துக்கு உள்ளாக்கி இருப்பதாக தெரிகிறது.
இது தொடர்பாக சிங்கள பத்திரிகையில் எழுதப்பட்டுள்ள செய்தியில்,
சமீபத்தில் பூநகரி பகுதியில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட தமிழ் பிரபாகரன், பிரித்தானியா பாராளுமன்றத்தில் 'இந்த நிலம் இராணுவத்துக்கு சொந்தமானது '(This Land Belongs to the Army)  என்ற ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அது மட்டுமின்றி வன்னிப் போரில் இலங்கை இராணுவம் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இவர் 'புலித்தடம் தேடி- இரத்த ஈழத்தில் 25 நாட்கள்' என்ற தொடரை எழுதி அதை அண்மையில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
இவர் பிரித்தானியா தமிழர் பேரவை, தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற குழு அழைப்பின் பேரிலேயே இதில் கலந்து கொண்டுள்ளார்.
இதே போல் இவர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி.களையும் அழைத்துள்ளனர்  என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நில அபகரிப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளையும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் மறுக்கிறது.

ad

ad