புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 பிப்., 2014

சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில் சீனாவின் தலையீடு – உன்னிப்பாக அவதானிக்கிறது இந்தியா

சிறிலங்கா உள்ளிட்ட அண்டை நாடுகளின் உட்கட்டமைப்புத் திட்டங்களில், சீனாவின் தலையீடு அதிகரித்து வருவது குறித்து இந்தியா உன்னிப்பதாக அவதானித்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். 

இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று அவர் சமர்ப்பித்த எழுத்து மூல அறிக்கையில்,

சிறிலங்கா, பங்களாதேஸ், மியான்மர், மாலைதீவு, பாகிஸ்தான் ஆகிய அண்டைநாடுகளில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ளன.

சிறிலங்கா, பங்களாதேஸ், மியான்மார் ஆகிய நாடுகளில், சீனா உட்கட்டமைப்புத் திட்டங்களில் கட்டுமானப் பணிகளில் அல்லது அதற்கான உதவிகளை வழங்குவதில் சீனா ஈடுபட்டுள்ளது என்பதை இந்திய அரசாங்கம் அறிந்தே வைத்துள்ளது.

நேபாளத்தில், நீர்மின், தகவல் தொழில்நுட்பத் திட்டங்களிலும், மாலைதீவில், தகவல்தொழில்நுட்ப மற்றும் வீடமைப்பு கட்டுமானத் திட்டங்களிலும், பாகிஸ்தானில் நீர்மின், அணுசக்தி திட்டங்கள் மற்றும், நெடுஞ்சாலைகள், வீதிகள், ஏற்றுமதி அபிவிருத்தி வலயங்கள், பொருளாதார திட்டங்களிலும் சீனா முதலீடுகளை செய்துள்ளது.

சீனத் தலையீடுகள் தொடர்பாக இந்திய அரசாங்கம் எப்போதும், கண்காணித்தபடியே உள்ளது.

இந்தியாவின் பாதுகாப்புக்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கும்.

அண்டை நாடுகளின் அபிவருத்தியில் செயற்பாட்டு நிலை பங்காளராக இந்தியா தொடர்ந்து இருந்து வருவதுடன், பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்தும் வருகிறது.

இந்தியாவின் பாரம்பரிய வட்டத்துக்குள் இருக்கும் நாடுகளில் சீனாவின் தலையீடு அதிகரித்து வருவது இந்தியாவுக்கு கவலை தரும் விடயமே.

எனினும், மூன்றாவது நாடு ஒன்றுடன் உறவுகளை வைத்துக் கொள்வது அந்தந்த நாடுகளின் சுதந்திரமாகும்.” என்றும் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

ad

ad