புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 பிப்., 2014

ஜெனிவாவில் மனிதஉரிமைகள் பேரவை உறுப்புநாடுகளின் தூதுவர்களுடன் நிஷா பிஸ்வால் சந்திப்பு

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவிச்செயலர் நிஷா பிஸ்வால், ஜெனிவாவில் உள்ள தூதுவர்களை சந்தித்து, சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்துக் கலந்துரையாடியுள்ளார். 

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுடனேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சிறிலங்கா தொடர்பாக ஜெனிவாவில் தாம் நடந்திய இந்தச் சந்திப்பு மிகவும் நல்லதாக அமைந்தது என்று நிஷா பிஸ்வால், கருத்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் பிரித்தானியாவில் சிறிலங்கா தொடர்பான சந்திப்புகளை முடித்த பின்னர், அவர் நேற்று இந்தச் சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.

முன்னதாக, அவர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து, கலந்துரையாடியிருந்தார்.

ad

ad