புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 பிப்., 2014

மக்களவைத் தேர்தல்: விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல்: விஜயகாந்த் அறிவிப்பு: தனித்துப் போட்டியா?
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாடாளுமன்ற தேர்தலுக்காக தங்கள் தொகுதியில் போடடியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் பிப்ரவரி 9ஆம் தேதி
முதல் 12ஆம் தேதி வரை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும். கட்சித் தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் இந்த நேர்காணல் நடைபெறும்.

எனவே விருப்ப மனு கொடுத்துள்ளவர்கள் தங்கள் தொகுதிக்கான தேதியில் நேரில் வரவேண்டும். கட்சி உறுப்பினர் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, கல்வி சான்றிதழ், தனித் தொகுதிக்கு சாதி சான்றிதழ் ஆகியவற்றின் ஒரிஜினல் கண்டிப்பாக கொண்டுவர வேண்டும்.
9ஆம் தேதி தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், சிதம்பரம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை தொகுதிக்கும், 
10ஆம் தேதி நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம், திருச்சி, பெரம்பலூர் தொகுதிக்கும்,
11ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை தொகுதிக்கும்,
12ஆம் தேதி வேலூர், ஆரணி, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை, புதுச்சேரி தொகுதிக்கும் நேர்காணல் நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோரிடம் நேர்காணல் நடக்க உள்ளதால், தேமுதிக தனித்து போட்டியிட வாய்ப்பு உள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

ad

ad