திமுக கூட்டணிக்கு அழைப்பு விடுத்து தேமுதிகவிடம் மீண்டும் வலியுறுத்த கடமைப்பட்டுள்ளேன்: திருமாவளவன்
பாஜக ஒரு வகுப்புவாதக் கட்சி. பாஜக ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையின மக்களுக்கு மட்டுமல்லாமல் தாழ்த்தபட்ட மற்றும் ஒடுக்கபட்ட மக்களுக்கும் பாதுகாப்பு இருக்காது. இட ஒதுக்கீடு என்ற கொள்கைக்கு சவக்குழி தோண்டிவிடுவார்கள். மேலும் சேதுசமுத்திர திட்டத்தை நடைமுறைபடுத்த மாட்டார்கள்
இலங்கை தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சனையில் காங்கிரஸ் பாஜக
ஆகிய இரு கட்சிகளும் ஒரே கொளைகள் உடையன. இலங்கை தமிழர்கள் விடுதலைக்கு பாஜக பாடுபடும் என்பது சொல்வது தமிழக மக்களை ஏமாற்றும் செயல்.
இந்தியாவை பொருத்தமட்டில் மூன்றாவது அணி என்பது வெற்றிகரமாக அமைந்ததில்லை. மத வெறி, ஜாதி வெறி சக்திகளுக்கு எந்த விதத்திலும் தமிழகத்தில் ஊக்கம் அளித்துவிடக்கூடாது. தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அழைப்பு விடுத்து கோரிக்கை விடுக்கப்பட்டது. அதே கோரிக்கையை தேமுதிகவிடம் மீண்டும் வலியுறுத்த கடமைப்பட்டுள்ளேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றி பெரும்.
சிதம்பரம் மக்களவை தொகுதி உறுப்பினராக நான் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு பணி நிறைவேற்றியுள்ளேன். மேலும் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு பணியாறற வேண்டி இருப்பதால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவேன் என்றார்.