ம.தி.மு.க. 10 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி! வைகோ பேச்சு!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற ம.தி.மு.க. நிர்வாகியின் திருமண விழாவில் பங்கேற்ற அவர் மேலும் பேசியதாவது,
தமிழர்களின் உரிமை, வாழ்வாதாரம், கலாச்சாரம், பண்பாடு என எல்லாவற்றையும்
அழித்த காங்கிரஸ் கட்சியை இத்தேர்தலோடு தூக்கி எறிய வேண்டும் என்பதுதான் நமது இலக்கு. இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்தும் யாரெல்லாம் அதற்கு காரணமானவர்கள் என்பதையும் நாட்டு மக்கள் அனைவரும் அறிந்துள்ளார்கள் ஆகவே இலங்கை பிரச்சனைக்கு ஓரிறு ஆண்டுகளில் தீர்வு கிடைத்துவிடும். மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரவுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானம் இதற்கு முன்னேற்றமாக இருக்கும்.மதுவால் தமிழக மக்கள் சீரழிவதை தடுத்து நிறுத்த வேண்டும். அநீதிக்கு எதிராகவும், கம்பீரமாகவும் ம.தி.மு.க. தொடர்ந்து போராடுவதால் நாட்டு மக்களின் கவனம் ம.தி.மு.க. பக்கம் திரும்பியுள்ளது. கட்சிக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. இதை ஏதோ தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக சொல்லவில்லை. இதுதான் உண்மை.
மோடியின் அலை நாடெங்கும் வீசுகிறது. ஆகையால் இத்தேர்தலில் ம.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பம்பரமாக தேர்தலில் பணியாற்றி வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
ராஜீவ்காந்தியின் கொலைக்குற்றவாளியாக உள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு கயிறு விரைவில் அறுத்து எறியப்படும். அதற்கான தீர்ப்பு விரைவில் வரும் என்றார்