புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 பிப்., 2014

உண்மையான போட்டி தி.மு.க., அ.தி.மு.க.வுக்குத்தான்: திமுக அணிக்கு தேமுதிக வரவேண்டும்: திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திட்டக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
இட ஒதுக்கீட்டை எதிர்க்க யார் துணிந்தாலும்
அவர்கள் தூக்கி எறியப்படுவார்கள். ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தொடர்ந்து நீடிக்கும் என்று சோனியா காந்தி அறிவித்துள்ளதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.

தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களும் இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்பதை சட்டமாக இயற்ற வேண்டும். தலித் மக்களின் உரிமைகளுக்காகவும், ஈழத்தமிழர்கள் பிரச்சனை குறித்தும் ராகுல் காந்தியுடன் பேசும்போது முறையிட்டுள்ளேன், மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் ஜ.நாவின் மனித உரிமை ஆணைய கூட்டத்தில் போர் குற்றம் குறித்து இலங்கை அதிபர் ராஜபக்சே மீது போர் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும். மீனவர்களுக்கு மத்திய அரசே மீன் பிடிக்கும் வலைகளையும், படகுகளையும் வழங்க வேண்டும்.
தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்து சட்டமாக்க வேண்டும். தனி சட்டம் கொண்டு வர அரசு முன் வரவேண்டும். அல்லது காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் இதனை குறிப்பிட வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நிறைவேற்றுவதில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. மாநில உரிமைகள் பாதிக்கப்படாத அளிவில் மாற்றங்கள் செய்து இந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
மீனவர்கள் பிரச்சினையில் தமிழக அரசு மட்டும் பேசிவருவது முழுமையாகாது. இதில் இந்திய அரசு, இலங்கை அரசு நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பிரச்சினையை தீர்க்க வேண்டும். தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க. அணியில் ஒரு அணியும், பாரதீய ஜனதா கட்சி தலைமையில் ஒரு அணியும் அமையும் சூழ்நிலை உள்ளது. இந்த 3 அணிகளிலும் சேர முடியாதவர்கள் தனியாக ஒரு அணியை உருவாக்குகின்றனர். ஆனால் உண்மையான போட்டி தி.மு.க. அணிக்கும், அ.தி.மு.க. அணிக்கும் தான்.
நான் சிதம்பரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறேன். தி.மு.க. அணிக்கு தே.மு.தி.க., வரவேண்டும் என எதிர்பார்க்கிறோம். தே.மு.தி.க. ஜாதி, மதவெறி கட்சிகளுடன் இணைந்து விட கூடாது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

ad

ad