நீதிமன்றில் சீ.ஐ.டியினரை கடிந்து கொண்டார் ரெமீடியஸ்

நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் ரெக்சியன் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு இன்று ஊர்காவற்துறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்போதே ரெமீடியஸ்மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்தாவது,
விளக்கமறியலில் இருக்கும் கந்தசாமி கமேலேந்திரன் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் பக்கச்சார்பாக நடந்து கொள்வதுடன் பொய்யான தகவல்களையும் மன்றிற்கு சமர்ப்பித்து வருகின்றனர்.
குறித்த கொலை தொடர்பில் கைதான சந்தேகநபர்களை விசாரணை செய்ய குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு ஊர்காவற்துறை நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அதனையடுத்து மன்றின் அனுமதி பெற்று சிறைச்சாலைக்குச் சென்ற குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் 2ஆவது சந்தேக நபரிடம் விசாரணை நடாத்தினர்.
அதில் முதலாவது சந்தேகநபரான கமலேந்திரன் நெடுந்தீவு பிரதேச சபை தலைவரை கொலை செய்தமையை நேரில் கண்டதாக கூறினால் 2ஆவது சந்தேக நபர் விடுதலை செய்யப்படுவார் என பொய் வாக்குறுதி ஒன்றினை வழங்கி அவரிடம் இருந்து பொய்யான தகவல்களைப் பெற்று மன்றில் சமர்ப்பித்துள்ளனர்.
எனினும் உண்மைக்குப் புறம்பான விடயங்களையே 2ஆவது சந்தேக நபர் வழங்கியுள்ளார். இருப்பினும் விசாரணை மேற்கொள்பவர்கள் பக்கச்சார்பின்றி செயற்பட்டு நீதியின் பால் மன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
ஆனால் இவர்கள் பொய்யான தகவல்களையே வழங்கி வருகின்றனர். இதனால் முதலாம் சந்தேக நபர் தொடர்பிலான உண்மை விடயங்கள் மறைக்கப்படும் என்றார்.
வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் கமல் தொடர்பில் விசாரணையினை மேற்கொண்டு வருகின்ற குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் திட்டமிட்ட வகையில் பொய்யான தகவல்களையே சமர்ப்பித்து வருகின்றனர் என சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி முடியப்பு ரெமீடியஸ் மன்றில் தெரிவித்தார்.