புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 பிப்., 2014

கனிமொழிக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி தகவல்

வரும் பாராளுமன்ற தேர்தலில் தன்னுடன் எந்த கட்சியும் கூட்டணி சேரவில்லை என்ற ஆதங்கத்தில் இருக்கிறது காங்கிரஸ். அந்த கட்சிக்கு திமுகவை விட்டால் வேறு வழியில்லை. அதே நேரத்தில் திமுகவில் காங்கிரஸ் கூட்டணியை ஸ்டாலின் கடுமையாக எதிர்க்கிறார்.
இந்நிலையில் கனிமொழியின் 2G துருப்புச்சீட்டை எடுத்துள்ளது காங்கிரஸ்.
சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் வெளியிட்ட கனிமொழி, ஜாபர் சேட் டேப் விவகாரம் கூட காங்கிரஸின் சதிதான் என்கிறார்கள். கருணாநிதிக்கு மிக நெருங்கிய ஒருவரிடம் இருந்து கைப்பற்றிய அந்த டேப், ஆம் ஆத்மி கட்சியினர் மூலம் வெளியிட்டு கருணாநிதியை மிரட்டப் பார்க்கிறது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த தகவல் முன்கூட்டியே கனிமொழிக்கு தெரிய வந்ததால்தான் அவருக்கு பிரஷர் அதிகமாக உடல்நலமில்லாமல் மருத்துவமனை வரை சென்று சிகிச்சை பெற்றார்.
இதனிடையே கனிமொழிக்கு தற்போது ஸ்டாலின், அழகிரி ஆகிய இருவரும் தனித்தனியே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே தன்னை காப்பாற்றிக்கொள்ள முடியும் என்பதால் கனிமொழி காங்கிரஸ் கூட்டணியை விரும்புவதாகவும் ஆனால் ஸ்டாலின் பிடிவாதமாக காங்கிரஸ் கூட்டணி தேவையில்லை என்று கூறிவருவதால் இருவருக்கும் இடையே மோதல் முற்றி வருகிறது. மேலும் அழகிரிக்கு பிறந்தநாள் வாழ்த்து கனிமொழி கூறவில்லை என்பதால் அந்த பக்கத்தில் இருந்த் கனிமொழிக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
ஒரே சமயத்தில் ஸ்டாலின், அழகிரியின் எதிர்ப்பு, ஸ்பெக்ட்ரம் வழக்கில் ரிலீஸான் டேப், ஆகியவைதான் கனிமொழியை மிகுந்த சோர்வடைய செய்ததாக கூறப்படுகிறது.

ad

ad