புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 பிப்., 2014

இரணைமடுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் அதிகாரிகளின் கொடும்பாவியில் எதிர்ப்பு வாசகங்கள்
கிளிநொச்சி இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டுசெல்லும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தன் பேரூந்து நிலையத்தில் 4 பேரின் உருவப் பொம்மைகள் அமைக்கப்பட்டு அதில் வாசகங்களும் பொறிக்கப்பட்டிருந்தாகவும், தாம் அகற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் வரையான இரணைமடுக் குடிநீர் விநியோகத் திட்டத்திற்கு கையொப்பமிட்ட சுப்பையா மனோகரன், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதித் திட்டத்தில் யாழ்ப்பாணத்திற்கு இரணைமடு நீரினைக் கொண்டு செல்லும் திட்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டப்பணிப்பாளர் எ.குருஸ், இத்திட்டத்திற்கான நீர்ப்பாசன பொறியிலாளர் எஸ்.பாரதிதாசன், நீர்வழங்கல் வாடிகாலமைப்புச் சபையின் அதிகாரி எஸ்.சிவபாதம் ஆகியோரின் உருவப்பொம்மைகள் அமைக்கப்பட்டு அதில் எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
இந்த உருவபொம்மைகள் யாரால் வைக்கப்பட்டன என்பது தொடர்பில் தெரியவில்லையெனவும், இதுதொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவை அகற்றப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ad

ad