புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2014

இந்திய பெருங்கடல் பகுதியில் மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்கள் போன்ற 2 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது.  அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.

சீனக்கடலுக்கு மேலே சுமார் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, வியட்நாம் அருகே தோ சூ தீவுக்கு 250 கி.மீ. தொலைவில் கடலில் விழுந்து நொறுங்கியதாக முதல் கட்ட தகவல் வெளியானது முதல், இதுவரை பல்வேறு முரண்பட்ட தகவல்களே வந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் இந்த விமானத்தை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் 26 நாடுகள் ஈடுபட்டு உள்ளன.ஆனால் விமானம் குறித்து முழுமையான விவரங்கள் இதுவரை தெரியவில்லை
எனினும், விமானத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது யார் என்பது அதிகாரிகளுக்கு முழுமையாக தெரியவில்லை.  மேலும், சென்று சேர வேண்டிய இடத்தை விட்டு வேறு பாதைக்கு ஏன், யார் விமானத்தை இயக்கி கொண்டு சென்றுள்ளனர் என்றும் விசாரணையில் தெரியவில்லை.
இந்திய பெருங்கடல் பகுதியில்  இரண்டு பொருடகள் காணப்படுவதாகவும் அது மாயமான மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்களாக இருக்கலாம் என ஆஸ்திரேலியா அறிவித்து உள்ளது. ஆஸ்திரேலிய கடல் பாதுகாப்பு அதிகாரசபை பொது மேலாளர் ஜான் யங் கூறியதாவது:-
சபைக்கு கிடைக்கப்பட்ட தகவலின்படி கடலில் கிடக்கும் பொருட்கள் மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்களாக இருக்க சாத்தியம் உள்ளது புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ள இடத்திற்கு ஆஸ்திரேலியாவின் விமானப்படை அனுப்பப்பட்டு உள்ளது. இந்த 2 பொருட்கள் தொடர்பான செயற்கைகோள் படங்களை  சிறப்பு நிபுணர்கள் ஆராய்ந்து   மலேசிய விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என அடையாளம் காணப்பட்டு உள்ளது,
அந்த பொருட்கள் 24  மீட்டர் நீளம் உள்ளதாக உள்ளன. குறிப்பிடபட்ட பொருடகள் கடலின் மிகவும் ஆழமான பகுதிகளில் உள்ளது.பொருள் காணப்படும் இடம் பெர்த்தில் இருந்து 2300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
இது குறித்து பிரதமர் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி கூறியதவது  மலேசிய பிரதமர் னஜாப் ரசாக்குக்கு தகவல் தெரிவித்து உள்ளேன்.இது குறித்த. இது குறித்த தேடுதல் முன்னேற்ற ஏற்பாடுகளையும் அவரிடம் தெரிவித்து உள்ளேன் என கூறினார்.
கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் பெய்ஜிங் சென்றபோது மாயமான மலேசியா விமானம் எங்கேதான் போனது, என்னதான் ஆனது என்பது தெரியவில்லை. மாயமாகி 12 நாட்கள் ஆகியும் அதன் கதி என்ன என்பது இன்னும் தெரியவில்லை. இந்த விமானத்தை தேடிக்கண்டுபிடிக்கும் பணியில் 26 உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும் இந்த நிமிடம் வரை எந்த பலனும் கிடைக்கவில்லை. விமானம் காணாமல் போனது தொடர்பாக பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்கள் போன்ற 2 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
செயற்கைக்கோள் புகைப்படங்களில் இருந்து ஆஸ்திரேலிய கடல் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைக்கப்பட்ட தகவலின்படி கடலில் கிடக்கும் பொருட்கள் மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்களாக இருக்க சாத்தியம் உள்ளது என்று அந்நாட்டு பிரதமர் டோனி அபோட் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும், புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ள இடத்திற்கு ஆஸ்திரேலியாவின் விமானப்படை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். விமானப்படையும் விமானத்தின் உடைந்த பாகங்களாக இருக்கலாம் என்று கருதப்படும் பொருகள் கிடக்கும் இடத்திற்கு விரைந்துள்ளது.
இதற்கிடையே அமெரிக்காவின் பி-8 போர்க்கப்பல் அப்பகுதிக்கு மிக அருகிலே உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மேலும் ஆஸ்திரேலியா பிரதமர் டோனி அபோர்ட் மலேசிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் இது தொடர்பாக பேசியதாக தெரிவித்துள்ளார். ராசக்கிடம் விமானத்தை தேடும் பணிகள் குறித்து பேசியதாகவும் டோனி அபோர்ட் தெரிவித்துள்ளார். விமானத்தை தேடும் பணியில் விமானங்கள் மற்றும் கப்பல்கள் ஈடுபட்டுள்ளது.

ad

ad