புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2014

நேற்று மட்டும் 78 இந்தியமீனவர்கள் கைது
ஒரேநாளில் 78 இந்திய மீனவர்களை நேற்று புதன்கிழமை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளதால் தமிழகக கரையோர மாவட்டங்களில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து இராமேஸ்வரம் மாவட்ட விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் போஸ் தகவல் தெரிவிக்கையில்-
இன்று கச்சதீவுக்கும் தனுஷ்கோடிக்கும் இடைப்பட்ட பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட இராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கைக் கடற்படையினர் மீனவர்களின் உபகரணங்களைச் சேதப்படுத்தினர்.பின்னர் 5 விசைப்படகுகளையும் 25 மீனவர்களையும் கைது செய்து மன்னாருக்கு அழைத்துச் சென்றனர்.
இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 53 பேரும் நேற்று புதன்கிழமை  நெடுந்தீவை அண்மித்த பகுதியில் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டு காரைநகருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.இவ்வாறு மொத்தமாக 78 மீனவர்களை ஒரே நாளில் இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளதால் கரையோர மாவட்டங்களில் பதற்றநிலை தோன்றியுள்ளது- என்றார்.
ஏற்கனவே கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த 172 இந்திய மீனவர்கள் 3 கட்டங்களாக விடுவிக்கப்பட்டு 2 மணிநேரம் கழிவதற்கிடையில் இவ்வாறு பெரும் எண்ணிக்கையான இந்தியமீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் எதிர்வரும் 25 ஆம் திகதி இலங்கை - இந்திய மீனவர் சந்திப்பு திட்டமிட்டபடி நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ad

ad