புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2014


வாஜ்பாய் அரசைப் போல் தமிழர் நலன் சார்ந்த அரசாக மோடி அரசு அமையும்: வைகோ

தமிழகத்தில் பாஜக கூட்டணி எதிர்பாராத வெற்றியைப் பெறும் என்று கூறினார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.

மதுரை வந்திருந்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழர்களின் உரிமையைக் காவுகொடுத்த, இலங்கைத் தமிழர்களின் படுகொலைக்குக் காரணமான காங்கிரஸை ஒரு போதும் மன்னிக்கமாட்டோம் என்றார்.
மேலும், மாநில சுயாட்சியை மதிக்கும் வகையில் திகழந்த வாஜ்பாய் அரசினைப் போல், நரேந்திர மோடி ஆட்சியும் திகழும் என்று கூறினார் வைகோ.
மோடியை பிரதமராக்க அவருக்காக வாக்களிக்க வேண்டும் என்றும், தமிழகத்தைப் பொறுத்தவரை, இது வெற்றிக் கூட்டணியாக அமையும் என்று கூறிய வைகோ, தமிழகத்தைத் தவிர்த்து பாஜக கூட்டணி தேசிய அளவில் 252 இடங்களைப் பெறும்; ஆட்சியைக் கைப்பற்ற போதுமான அதிகாரத்தை பெறும் என்றும் கூறினார்.
தமிழகத்தில் இதுவரை திமுக., அதிமுக ஆகிய கட்சிகள் இடம்பெறும் கூட்டணிகளே ஆட்சியில் இருந்துள்ளன, மாறி மாறி தேசியக் கட்சிகளூடன் கூட்டணி அமைத்திருந்த இவர்களின் மீதான எதிர்மறை எண்ணங்களாலேயே இருவருக்கும் மாறி மாறி மக்கள் வாக்களித்தனர். ஆனால், இம்முறை முதல் முறையாக இரண்டும் இல்லாத ஒரு தேசியக் கூட்டணி இங்கே அமைந்துள்ளது. ஆகவே இம்முறை மக்கள் திமுக., அதிமுக., இரு கட்சிகளுக்கும்  மாற்றாக அமைந்துள்ள பாஜக கூட்டணியை ஆதரிக்க வேண்டும்.
கூட்டணி பங்கீடு குறித்துப் பேச ராஜ்நாத் சிங் நாளை சென்னை வருகிறார். எனவே, நான் இப்போது மதிமுக வேட்பாளர்கள், தொகுதிகள் குறித்து அறிவிப்பது நன்றாக இருக்காது என்று கூறிய வைகோ, விருதுநகர் மதிமுகவுக்குத்தான் என்று பாஜக கூறிவிட்டதால், நாம்  இப்போதே ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என்றார். மேலும், காங்கிரஸ் கட்சியையும் அதனோடு நேரடியாகவும் மறைமுகமாகவும் கூட்டணி வைக்கின்ற கட்சிகளையும் தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றார் வைகோ.
கூட்டணிப் பேச்சுவார்த்தை இன்னும் முடிவாகவில்லை என்றாலும், விருதுநகர் தொகுதி நிச்சயம் மதிமுகவுக்கே என்று பாஜக கூறிவிட்டதால், பம்பரம் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று கூறினேன் என்றார் வைகோ.

ad

ad