புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2014


''நாம் சிங்கத்தின் பரம்பரை.. சிறு நரிகளிடம் பிச்சை கேட்க மாட்டோம்!''
)



தர்மபுரியில் விஜயகாந்த்தின் பிரசாரம் கேப்டன் டி.வி-யிமீண்டும் பாய்ச்சலுக்குத் தயாராகும் பா.ம.க.!ல் லைவ் ஓடிக்கொண்டு இருந்தது. அதே நாளில் தர்மபுரி தொகுதி பா.ம.க. வேட்பாளராக அன்புமணியை அறிவிக்கும் கூட்டத்துக்கு ராமதாஸும் தர்மபுரி வந்திருந்தார். பைபாஸ் ரோட்டில் உள்ள டி.என்.ஜி. ஹோட்டல் அறையில் கேப்டன் டி.வி-யில்
விஜயகாந்த்தின் பேச்சைக் கேட்டுவிட்டுத்தான் பொதுக்கூட்ட மேடைக்கு கிளம்பினார் டாக்டர் ராமதாஸ்.நன்றி விகடன்
 அவர் மேடைக்கு வந்ததும் காடுவெட்டி குரு பேச ஆரம்பித்தார். ''தர்மபுரி கலவரத்துக்கு காரணமே இல்லாத மருத்துவர் ஐயாவையும், சின்ன ஐயாவையும் சிறையிலடைத்துக் கொடுமைப்படுத்தினார்கள். நாங்கள் செய்த ஒரே தவறு இரட்டை இலைக்கு ஓட்டுப் போட்டது மட்டும்தான்! ஆண்ட இனத்தை ஓட்டுப்போடும் இனமாகவும், சாராயம் குடிக்கும் இனமாகவும் மட்டுமே மாற்றிய இவர்களுக்கு நாம் கொடுக்கப்போகும் தண்டனை என்ன?
இந்தத் தேர்தலில் அதிகமான தொகுதிகளை நாம் கைப்பற்ற வேண்டும். அப்போதுதான் அடுத்த  2016 தேர்தலில் சின்ன ஐயாவை நாம் முதல்வராக்க முடியும். இந்த முறை பணத்துக்காவோ, சாராயத்துக்காகவோ ஓட்டுப் போடாதீர்கள். இந்த இனத்தின் மானம் காக்க ஓட்டுப்போடுங்கள். யாருக்கும் கிடைக்காத வேட்பாளர் உங்களுக்குக் கிடைத்திருக்கிறார். தர்மபுரி வன்னியர்களின் மைல் கல் என்பதை நிரூபிக்கும் நேரம் வந்துவிட்டது!'' என்பதோடு முடித்துக்கொண்டார்.
அன்புமணியை தர்மபுரி தொகுதி வேட்பாளராக ராமதாஸ் அறிமுகம் செய்துவைத்தார். பிறகு அன்புணி பேசினார். ''இந்த ஊருக்கு நான் 16 ஆண்டுகளாக வந்துகொண்டு இருக்கிறேன். முதல் முறையாக உங்கள் தொகுதி வேட்பாளராக வந்திருக்கிறேன். இத்தனை நாள் நான் சொல்வதை நீங்கள் கேட்டீர்கள். இனி நீங்கள் சொல்வதை நான் கேட்க இருக்கிறேன். இங்கே இருக்கும் அண்ணன்களுக்கெல்லாம் நான் தம்பி. தம்பிகளுக்கெல்லாம் நான் அண்ணன். சகோதரிகளுக்கெல்லாம் சகோதரன். இந்த முறை எனக்கு வாய்ப்புக் கொடுங்கள் தர்மபுரியை துபாயாக மாற்றுவேன் என்று சொல்ல மாட்டேன். ஆனால், நிச்சயம் உங்கள் பிரச்னைக்காக டெல்லியில் வாதம் செய்வேன். தேவை என்றால் பிடிவாதமும் செய்வேன். பின்தங்கிய இந்த மாவட்டத்தை முதல் ஐந்து இடத்துக்குள் கொண்டுவருவேன். அதற்கு நீங்கள் மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்'' என்று முடித்தார்.
கூட்டத்தின் இறுதியில் பேசிய ராமதாஸ், கூட்டணிக்கும் சேர்த்து செக் வைத்தார். 'கிளம்பிற்று காண் தமிழ்ச் சிங்கக் கூட்டம், கிழித்தெறிய தேடுது காண் பகைக் கூட்டத்தை;’ யார் இந்த பகைவர்கள் அ.தி.மு.க-வும் தி.மு.க-வும்தான் நம் பகைவர்கள். வருவார்கள். சளி, புலி, பழி, கம்பளி என்பார்கள். மடிப்பிச்சை கேட்பார்கள் ஏமாந்து விடாதீர்கள். அ.தி.மு.க-வை டெபாசிட் இழக்கவைத்த பென்னாகரம் ஃபார்முலா நம்மை வழிநடத்துகிறது. நீங்கள் எல்லாம் சிங்கக்குட்டிகள். பணத்துக்கும், சினிமாத்தனத்துக்கும் விலை போகாதவர்கள். அன்புமணி உங்கள் வீட்டுப்பிள்ளை. தர்மபுரியின் பிள்ளை. இந்தப் பிள்ளையை உங்களிடம் ஒப்படைக்கிறேன். தமிழ்நாட்டிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் இந்தப் பிள்ளையை நீங்கள் வெற்றிபெற வைக்க வேண்டும். பல செய்திகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். அதை அடுத்தடுத்த கூட்டங்களில் சொல்கிறேன்!'' என்று சஸ்பென்ஸ் வைத்து நிறுத்தியவர்,
''சிங்கங்கள் சிறு நரிகளிடம் பிச்சை கேட்குமா?  நெவர்... நெவர்... எவர்... எவர்... ஒருபோதும் கேட்காது. புரட்சி என்ற ஒரு வார்த்தைக்கு அர்த்தமில்லாமல் போய்விட்ட இந்தக் காலத்திலே இங்கு ஒரு மௌனப்புரட்சி நடக்கிறது. அது அன்புமணி புரட்சி. தி.மு.க., அ.தி.மு.க-வைச் சேர்ந்த தொண்டர்கள்தான் பா.ம.க-வை வெற்றிபெற வைக்கப்போகிறார்கள். எங்கே பார்த்தாலும் பாட்டாளி மக்கள் கட்சியின் அலை மட்டுமே வீசுகிறது. சினிமாவில் மழை பெய்யும். அலையடிக்கும். புயலடிக்கும். வெளியில் எதுவும் இருக்காது. நான் நடத்துவது நேர்மையான அரசியல். இது வியாபாரம் அல்ல. சினிமா பாணி அரசியலும் அல்ல.
சேலம் அருள் இங்கே வந்திருப்பான். அவனை சேலம் தொகுதி வேட்பாளராக அறிவித்திருந்தேன். அவனுக்கு சேலம் கிடைக்குமா என்று கலக்கமாக இருக்கிறது. அருள் உனக்கு எதுக்கு கலக்கம். உனக்கு எதுக்கு தயக்கம்? நீ சேலத்தை நோக்கிக் கிளம்பு. மக்கள் உனக்குத் துணை நிற்பார்கள். பாட்டாளிச் சொந்தங்கள் உன்னை வெற்றிபெற வைப்பார்கள். பெரும் ஓசை எழுப்பிப் போ. எட்டு திக்கிலும் மணியோசை கேட்கட்டும். நான் ஜி.கே.மணியை சொல்லவில்லை. இது வேறு மணியோசை!'' என்றதும் அருளுக்கு ஆனந்தக் கண்ணீர்.
''இந்தத் தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும். அதிகாரிகள் நேர்மையாக செயல்பட வேண்டும். ஜெயலலிதா ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. புதிய ஆட்சியை மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அந்த ஆட்சி பா.ம.க. தலைமையிலான ஆட்சியாகத்தான் இருக்கும்!'' என்று பேசி முடித்தார்.
இரவு கூட்டம் முடிந்து தர்மபுரியிலேயே தங்கிவிட்டார் ராமதாஸ். இரவு நீண்ட நேரம் ஹோட்டலில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். மறுநாள் காலையும் நிர்வாகிகளை அழைத்துப் பேசியவர், ''கூட்டணி இருக்குமா என்பது தெரியலை. நாம எதுக்கும் தயாராக இருக்கணும். நம்மோடு இருக்கும் அனைத்து சமுதாயப் பேரவை நிர்வாகிகளுடன் பேசிட்டு இருங்க. கூடிய சீக்கிரமே அவங்க எல்லோரையும் சந்திக்க வேண்டியிருக்கும்!'' என்று சொல்லிவிட்டுத்தான் தர்மபுரியில் இருந்து கிளம்பியிருக்கிறார்.
பி.ஜே.பி-யுடன் பேச்சுவார்த்தை முடியப் போகிறதா... முறியப்போகிறதா?
- எம்.புண்ணியமூர்த்தி
படங்கள்: வி.ராஜேஷ்

ad

ad