புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2014




தமிழ்நாட்டில் பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், இடது சாரிகள் தலைமையில் 5 முனைப் போட்டி ஏற்பட் டுள்ளது. இதில் அ.தி.மு.க., தி.மு.க., இடது
சாரிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தில்  ஈடுபட்டுள்ளனர்.
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று இரவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி யில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. ஐ.ஜே.கே., கொங்கு நாடு ஆகிய 6 கட்சிகள் உள்ளதால், தொகுதி பங்கீட்டை உறுதி செய்ய சுமார் 2  மாதங்களுக்கும் மேல் ஆனது.
சில குறிப்பிட்ட தொகுதி களை ஒதுக்குவதில் பா.ஜ.க. - பா.ம.க. இடையே கடும் இழுபறி நீடித்தது. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு நேற்று தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டது.
இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க பா.ஜ.க. தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங் இன்று (வியாழக்கிழமை) பகல் 11.45 மணிக்கு சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை தமிழக பா.ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், ம.தி.மு.க.  பொதுச்செய லாளர் வைகோ மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகி கள்,  வரவேற்றனர்.
விமான நிலைய வரவேற்பு முடிந்ததும் ராஜ்நாத்சிங் சென்னை ராயப்பேட்டை நியூஉட்லண்ட்ஸ் ஓட்டலுக்கு மதியம் 1 மணிக்கு வந்தார்.
அங்குள்ள ஒரு அறையில் ராஜ்நாத்சிங் தங்கினார். பிறகு தமிழக பா.ஜனதா தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன்,  மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் உட்லண்ட்ஸ் ஓட்டலுக்கு வர தொடங்கினார்கள். அவர்கள் அமர தனித்தனி அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, அன்புமணி ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர்  ஆகியோர் தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் அமர்ந்தனர்.
பின்னர் ராஜ்நாத்சிங் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒவ்வொருவரையும் அழைத்து தனித்தனியாக பேசினார். தொகுதி உடன்பாடு, தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அவர்கள் விவாதித்தனர்.
இந்த பேச்சுவார்த்தையின் போது  பா.ஜ.க. கூட்டணி யில் சுமூக முடிவு எட்டப் பட்டது.
கூட்டணி கட்சிக ளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் எண்ணிக்கை வருமாறு:-
தே.மு.தி.க-14, பாரதீய ஜனதா -8, பா.ம.க-8, ம.தி.மு.க-7, ஐ.ஜே.கே-1, கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி-1.
 தொகுதிகள் குறித்த விவரங்களை மாநில தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் முன் அறிவித்தார்
ஓவ்வொரு கட்சிகளுக்கும் ஒதுக்கபட்டு உள்ள தொகுதி விவரம் வருமாறு:-
தேமுதிக -14
திருவள்ளூர், மத்திய சென்னை, வடசென்னை, கள்ளக்குறிச்சி. சேலம், திருச்சி, திண்டுக்கல், கடலூர், மதுரை, நெல்லை, விழுப்புரம், நாமக்கல், கரூர், திருப்பூர்

பாமக -8
அரக்கோணம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஆரணி, சிதம்பரம், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, நாகை

பாஜக-8
தென்சென்னை, வேலூர், கோவை, தஞ்சை, சிவகங்கை, நீலகிரி, ராமநாதபுரம், கன்னியாகுமரி.

மதிமுக-7
காஞ்சிபுரம், ஈரோடு, தேனி, விருதுநகர், ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி, தென்காசி,

இந்திய ஜனநாயக கட்சி-1
பெரம்பலூர்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி-1
பொள்ளாச்சி

ad

ad