புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2014

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை - கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட 7 பேருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு தெரிவித்தே அவர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தலைவர் தாக்கல் செய்த மனுவொன்றை இன்று விசாரித்த நீதிமன்றம் அழைப்பாணை உத்தரவை பிறப்பித்துள்ளது.
பிரதேச சபையின் 2014 வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதால் தான் பதவி விலக்கப்படுவதை எதிர்த்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தலைவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
மனுவின் பிரதிவாதிகளாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், உள்ளூராட்சி சபை ஆணையாளர், பிரதேச சபை செயலாளர் உள்ளிட்ட 7 பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
விக்னேஸ்வரனுக்கு எதிராக கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் 
வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், மாகாண சபையின் அதிகாரங்களை மீறியே செயற்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டு, கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் மாகாண சபையின் பிரதம செயலாளர் திருமதி ஆர்.விஜயலட்சுமியினால் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அதாவது, வடக்கு மாகாண முதலமைச்சர் மாகாண சபையின் 13வது திருத்தச் சட்டதிட்டங்களை மீறியும், மாகாண ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோரின் அதிகாரங்களுக்கு அப்பால் சென்று செயற்படுகின்றார்.
அத்தோடு, பிரதம செயலாளருடைய உரிமையை பறிக்கும் வகையில் தொடர்ந்தும் செயற்படுவதாகக் தெரிவித்தும், தன்னுடைய உரிமைப் பெற்றுக்கொள்ள நீதிதமன்றம் உதவ வேண்டுமென்றும் பிரதம செயலாளரினால் தொடரப்பட்ட வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்றையதினம் யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய வடக்கு முதலமைச்சர், பிரதம செயலாளரினால் தொடரப்பட்ட வழக்கை வரவேற்றுள்ளதுடன், அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
ஏனெனில், 13 திருத்தச் சட்டத்திற்கமைய மாகாண சபையின் அதிகாரங்கள் யாருக்கு இருக்கின்றதென்பதை உச்ச நீதிமன்றத்தினூடாக மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ad

ad