புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2014

ஐ.நாவுக்கு தகவல் கொடுப்போரைக் கண்டுபிடிக்க இலங்கையில் விசேட புலனாய்வு பிரிவு -மன்னிப்பு சபை குற்றச்சாட்டு
ஐக்கிய நாடுகளுக்கு தகவல் தருவோர் தொடர்பில் இலங்கை விசேட புலனாய்வு  பிரிவு ஒன்றை நிறுவவுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என்று சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
லண்டனை மையமாகக் கொண்ட சர்வதேச மன்னிப்புச் சபை, இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கம், மனித உரிமைகள் மற்றும் நீதியற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனிவாவில் தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை தோற்கடிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் மோசமான சூழ்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இதன் ஒரு கட்டமாகவே செய்தியாளர்கள், மனித உரிமை காப்பாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் காணாமல் போனோரின் உறவினர்கள் ஆகியோரை துன்புறுத்துவதாக சர்வதேச மன்னிப்பு சபையின் ஜெனிவா பிரதிநிதி பீட்டர் ஸ்பிலின்டர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அண்மையில் கைது செய்யப்பட்ட இரண்டு மனித உரிமை காப்பாளர்களையும் விடுவித்தமை சிறந்த செயல்.
எனினும் பல மனித உரிமை காப்பாளர்கள் இன்னும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளமையை மன்னிப்புச் சபையின் பிரதிநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ad

ad