புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2014

தமிழ் ஊடகவியலாளா்s Foto
கிளிநொச்சி வீதிகளில் அதிகளவு இராணுவம் மற்றும் புலனாய்வாளர்கள் 
கிளிநொச்சி தருமபுரத்தில் அண்மையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையடுத்து, மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கைள் மிகத் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளது.
அத்துடன் இராணுவ நடமாட்டங்களும் அதிகரித்துள்ளன. உடற்பரிசோதனை, வாகன சோதனை, அடையாள அட்டை பரிசோதனை போன்ற கெடுபிடிகளில் படையினர் மிகத்தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
சில வீடுகளுக்குள் நுழைந்தும் படையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். கனகபுரம், ஜெயந்திநகர், திருநகர், தொண்டைமான் நகர் போன்ற பகுதிகளில் இவ்வாறான சோதனைகள் அதிகளவில் இடம்பெற்றன. இதேவேளை, கிளிநொச்சி நகர வீதிகளில் அதிகளவு இராணுவம் மற்றும் புலனாய்வாளர்கள் எனக் கருதப்படுவோரின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் மாவட்ட மக்கள் ஒருவித அசௌகரியத்துடன் நடமாடுகின்றனர். இதனிடையே கடந்த சில தினங்களாக இரவு வேளைகளினில் வன்னி பகுதி நேர காலத்துடனேயே முடங்கிவிடுவதாகவும்

ad

ad