புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மார்., 2014


நடிகர் கார்த்திக் தென்சென்னையில் போட்டி?
 தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில், 30 பேர் இடம் பெற்றனர். இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலில், நான்கு
பேரும், மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியலில், மூன்று பேரும் இடம் பெற்றனர். விழுப்புரம், தென்சென்னை ஆகிய இரு தொகுதிகளுக்கும், யார் வேட்பாளர் என்பதில், நீண்ட இழுபறி ஏற்பட்டது.


விழுப்புரம் தொகுதிக்கு, மத்திய அமைச்சர் வாசனின் ஆதரவாளரும் முன்னாள் எம்.பி.,யுமான, ராணி போட்டி யிடுகிறார். இதற்கான அறிவிப்பு நேற்று முன்தினம் நள்ளிரவில் வெளியிடப்பட்டது.
தென்சென்னை தொகுதியை பெற, மத்திய அமைச்சர் சிதம்பரம் ஆதரவாளரான கராத்தே தியாகராஜன், மற்றொரு மத்திய அமைச்சரான, வாசனின் ஆதரவாளர்களான, சி.கே.பெருமாள், மயிலை பெரியசாமி மற்றும் அமெரிக்க நாராயணன், ரமணி, கிறிஸ்டோபர் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.


இதற்கிடையில், அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவர், கார்த்திக், காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, அந்தக் கட்சி மேலிடத்திடம் மதுரை தொகுதியை ஒதுக்கும்படி கேட்டு வருகிறார். ஆனால், அவருக்கு மதுரை தொகுதிக்கு பதிலாக, தென்சென்னை தொகுதியை ஒதுக்க, காங்., மேலிடம் விரும்புவதாகவும், இதுதொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ad

ad