புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மார்., 2014

கத்துக்குட்டி நெதர்லாந்திடம் படுதோல்வியடைந்தது இங்கிலாந்து.புதிய வரலாறு 

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நாணயசுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதை தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து
133 ஓட்டங்களை எடுத்தது. அதிக பட்சமாக பரேசி 48 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
134 ஓட்டங்கள் என்ற எளிய வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 87 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியடைந்தது.
நெதர்லாந்து அணியில் வான் பெக், புஹாரி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் நெதர்லாந்து அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
3.4 ஓவரில் 12 ஓட்டங்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய நெதர்லாந்து அணியின் புஹாரி ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

ad

ad