புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மார்., 2014

அதிமுக– திமுகவை பா.ஜ.க. விமர்சிக்காதது ஏன்?: இல.கணேசன் விளக்கம்

பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–  காங்கிரஸ் கட்சியினருக்கு தேர்தலுக்கு முன்பு ஞானோதயம் பிறந்ததை
போல் இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் அணுகு முறைக்கு வருத்தம் அடைவதாக தெரிவித்துள் ளார்கள். ஆனால் மக்கள் காங்கிரசை நம்ப தயாராக இல்லை.


கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு செய்தழல்களும் நிர்வாக சீர் கேடுகளும் ஏராளம். மீண்டும் ஒரு தவறு செய்ய மக்கள் வாய்ப்பு தரமாட்டார்கள்.
தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது அ.தி. மு.க.வையும். தி.மு.க.வையும், பாரதீய ஜனதா விமர்சிக்க வில்லை என்று கூறுகிறார்கள். இந்த தேர்தல் பாராளுமன்ற தேர்தல். பிரதமராக வேண்டியது மோடியா? அல்லது பிறகு அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கக் கூடிய ராகுலா என்று முடிவு செய்ய வேண்டிய தேர்தல் ஆனால் ஒவ்வொரு தேர்தலிலும் ஜெயலலிதாவா? அல்லது கருணாநிதியா என்பதுபோல் மக்களை திசை திருப்பி வருகிறார்கள்.
எனவே நாங்கள் அப்படி திசை திருப்ப விரும்பவில்லை. நாங்கள் ஜெயித்தால் நாட்டுக்கும், தமிழகத்துக்கும், தொகுதிக்கும் என்ன செய்வோம் என்று பேசுவதை மட்டும் கொள்கையாக வைத்துள்ளோம்.
இப்போது விஜயகாந்த், வைகோ மற்றும் பா.ம.க. தலைவர்கள் மோடியை பிரதமராக்கவும், பாரதீய ஜனதாவை ஆதரித்தும் பிரசாரம் செய்வது பெருமையாக உள்ளது.
தேர்தல் ஆணைய கட்டுப்பாடுகளை நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரத்தில் தேவையற்ற அதீதமான முறையில் எடுக்கும் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது. குறிப்பாக டாக்டர் அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது. இது அமைதியான தேர்தலுக்கு குந்தகம் விளைவிக்கும். அதே போல் ஏ.கே.மூர்த்தியின் பிரசாரத்தின்போது நடத்தப்பட்ட தாக்குதலும் கண்டிக்கத்தக்கது. எதிர் அணியினர் விரக்தியின் விளிம்பில் இருப்பதால் இவ்வாறு செயல்படுகிறார்கள்.
டாக்டர் ராமதாஸ் உடல்நலம் சரியில்லாததால் இன்னும் பிரசாரம் செய்ய வரவில்லை.மோடி பயண திட்டங்களை வானதி சீனிவாசன் தலைமையிலான குழுவினர் வகுத்து வருகிறார்கள்’’என்று அவர் கூ றினார்

ad

ad