புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மார்., 2014


சுருண்டது ஆஸ்திரேலியா: தொடர்வெற்றியை பதிவு செய்த இந்தியா
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இன்றைய ஆட்டத்தில் 

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை இந்திய அணிக்கு வழங்கியது.
இதன் படி களமிறங்கிய இந்திய அணி தனது (20) ஓவர்கள் நிறைவில் (7) விக்கெட்டுக்களை இழந்து (159) ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்திய அணியின் துடுப்பாட்டத்தை பொறுத்த வரையில்..
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் அணியின் ஓட்ட எண்ணிக்கையை ஓரளவுக்கு உயர்த்தி இருந்தாலும் கூட அவர்களின் ஆட்டம் பிரகாசிக்கவில்லை எனலாம்.
பின்னர் களமிறங்கிய வீரர்களின் வரிசையில் யுவராஜ் மற்றும் டொனியின் இணைப்பாட்டத்தின் மூலம் வலுவான ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக்கொண்டது இந்திய அணி.
இதில் யுவராஜ் (43) பந்துகளில் (4) சிக்ர்கள் அடங்கலாக (60) ஓட்டங்களை தனது அதிரடி மூலம் இந்திய அணிக்காக பெற்றுக்கொடுத்துள்ளார்.
 
                                                
 
ஆஸ்திரேலியா அணி வீரர்களின் பந்து வீச்சில் விக்கெட்டுக்கள் தொடர்ந்து சரிந்தாலும் கூட இந்திய அணி வீரர்களின் துடுப்பாட்டம் இறுதிவரை அதிரடியாகவே காணப்பட்டது எனலாம்.
 
                                                
 
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலியா அணி (16.2) ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து (86) ஒட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
இதன் மூலம் இந்திய அணி (73) ஓட்டங்களால் தனது வெற்றியை பதிவுசெய்துள்ளளது.
 
இந்திய வீரர்களின் பந்து வீச்சை பொறுத்தவரையில் அதிகப்படியாக (4) விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார் ஆர்.அஷ்வின்.
 
                                                 
 
இதேவேளை இதுவரை இடம் பெற்ற போட்டிகள் அனைத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad