புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மார்., 2014

அரையிறுதிப் போட்டிக்குள் நுழைவது யார் : இலங்கை – நியூஸிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

இப்போட்டியில் இலங்கை அணி தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்தன ஆகியோருக்கு இது இறுதி T20 போட்டியாகவும் அமைந்து விடும் சாத்தியம் உள்ளது.
முதலாவது குழுவிலிருந்து தென்னாபிரிக்க அணி ஏற்கனவே அரையிறுதியை உறுதிசெய்துள்ள நிலையில் அப்பிரிவில் 2 ஆவதாக அரையிறுதிக்குள் நுழைவது யார் என்ற போராட்டத்திலேயே இன்று இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
லீக் சுற்றில் இதுவரை தலா 3 போட்டிகளில் விளையாடியுள்ள இரு அணிகளும் 2 வெற்றி ஒரு தோல்வி என தலா 4 புள்ளிகளை பெற்றுள்ளன. இந்நிலையிலேயே தமது இறுதி லீக் போட்டியில் ஒன்றையொன்று சந்திக்கும் இரு அணிகளும் இன்று இறுதிவரை வெற்றிக்காக போராடவுள்ளன.
அணித்­த­லைவர் சந்­திமால் ஐ.சி.சி.யின் ஒரு போட்­டித்­த­டைக்­குள்­ளா­கி­யுள்­ளதால் இன்­றைய போட்­டியில் இலங்கை அணியை லசித் மலிங்க தலை­மை ­தாங்­க­வுள்ளார். மிக வும் தீர்க்­க­மான போட்­டியில் அழுத்­தங்­க­ளுக்கு மத்­தியில் தலை­மை­யேற்­க­வுள்ள மலிங்க, அணியை வெற்­றிப்­பா­தைக்கு அழைத்துச் செல்­வாரா என்ற எதிர் பார்ப்பு எழுந்துள்ளது.
இரு அணிகளுக்கும் கட்டாய வெற்றியை நோக்கியதாக அமைந்துள்ள இப்போட்டி இறுதிவரை விறுவிறுப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுவரையில் இரு அணிகளும் 12 T20 போட்டிகளில் மோதியுள்ளன.
அதில் இரு அணிகளும் தலா 5 வெற்றிகளைப்பெற்றுள்ளதுடன் ஒரு போட்டி சமநிலையிலும் மற்றயது முடிவு எட்டப்படாமலும் முடிவடைந்துள்ள.

ad

ad