புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மார்., 2014

அரசியல் தலைவர் எனக்கே இந்த அவமரியாதையா? : விருதுநகரில் வைகோ சாலை மறியல் போராட்டம்

விருதுநகர் அருகே உள்ள பெரிய வெள்ளிக்குளத்தில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் பறக்கும் படையை சேர்ந்த தேவராஜ் தலைமையில் போலீசார் இன்று காலை வாகன சோதனையில்
ஈடுபட்டு கொண்டிருந்தனர்.


அப்போது விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் ம.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வைகோ, அருப்புக் கோட்டைக்கு பிரசாரம் செய்ய வாகனத்தில் சென்றார். அப்போது அவருடன் தொண்டர்களும் சென்றனர்.
அங்கு நின்ற போலீசார் வாகனத்தை சோதனை செய்ய வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதையொட்டி ம.தி.மு.க. தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது போலீசார் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
ம.தி.மு.க. தொண்டர்களுடன் போலீசார் தகராறு செய்ததை கண்டித்து வைகோ பிரsசார வேனில் இருந்து கீழே இறங்கி அருப்புக்கோட்டை ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினார். ’’காவல்துறை மக்களின் நண்பனாக நடந்துகொள்ளவேண்டும்.  அரசியல் தலைவர் எனக்கே இந்த அவமரியாதையா?’’ என்று ஆவேசப்பட்டவர்,  கொளுத்தும் வெயிலில் கொதிக்கும் தார் சாலையிலேயே அமர்ந்துவிட்டார்.  அவருடன் ம.தி.மு.க. தொண்டர்களும் மறியலில் ஈடுபட்டனர்.
தரக்குறைவாக பேசிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்கள் இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுபற்றி தகவல் அறிந்ததும் சூலக்கரை இன்ஸ்பெக்டர் அன்புராஜன், ஆர்.டி.ஓ. உதயகுமார் ஆகியோர் விரைந்து சென்று மறியல் நடத்திய வைகோவுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 40 நிமிட நேரம் மறியல் போராட்டம் நடந்தது.
அதன் பின்பு வைகோ அங்கிருந்து பிரசாரம் செய்ய அருப்புக்கோட்டை சென்று விட்டார். ஆனால் ம.தி.மு.க. தொண்டர்கள் சாலையோரம் நின்று கொண்டு போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ad

ad