புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மார்., 2014

முன்னாள் உறுப்பினர்கள் பலர் உறுப்புரிமைகளை இழந்துள்ளனர்
இந்த முறை இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தலில் தென் மற்றும் மேல் மாகாண சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் உறுப்புரிமைகளை இழந்துள்ளனர். 
கம்பஹா மாவட்டத்தில் 14 பேரும், களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய மேல் மாகாண சபை உறுப்பினர்கள் 5 பேரும் இதில் உள்ளடங்குகின்றனர்.
இதேவேளை, தென் மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் உறுப்பினர்கள் 16 பேரும் இந்த முறை தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளனர்.
இதுதவிர, 2009 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் இராணுவ வீரர்களாக இருந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பலர் இந்த முறை தேர்தலில் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, நடிக, நடிகைகள் பலரும் இந்தமுறை தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளனர்.

ad

ad