புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூலை, 2014

மறக்க முடியாத வெற்றி\' 2011ம் ஆண்டு தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் - டோனி 
லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இது மிகவும் மறக்க முடியாத வெற்றி
என்று இந்திய அணித்தலைவர் டோனி கூறியுள்ளார்.
 
லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. 
 
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இஷாந்த் சர்மா ஆவேசமாகப் பந்து வீச இங்கிலாந்து 223 ரன்களுக்குச் சுருண்டு 95 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வி தழுவியது. 
 
இந்திய வீரர் இஷாந்த் சர்மா 7 விக்கெட்டை வீழ்த்தினார். முகமது சமி மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணியின் சார்பில் ஜோ ரூட் மட்டும் அதிகபட்சமாக 66 ரன்களில் எடுத்தார்.
 
 1932-ம் ஆண்டில் இருந்து 17-வது முறையாக லார்ட்சில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிய இந்திய அணி இங்கு ஒரே ஒரு டெஸ்டில் மட்டுமே (1986-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில்) வெற்றி பெற்றிருந்தது. தற்போது லார்ட்சில் 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது.
 
இஷாந்த் சர்மாவுக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டது. ஆட்டம் முடிந்ததும் பரிசளிப்பு விழாவில் பேசிய டோனி "மறக்க முடியாத வெற்றி. இந்த அணியில் இங்கிலாந்து மைதானங்களில் விளையாடிய அனுபவம் சில வீரர்களுக்கு இல்லை. ஆனாலும் இவர்களது அணுகுமுறை அபாரமாக இருந்தது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உகந்த மைதானம். பேட்டிங் மிகவும் அருமையாக அமைந்தது. இங்கிலாந்து பவுலர்கள் இந்திய பேட்ஸ்மென்களுக்குப் பந்து வீசவில்லை. ஆனால் அவர்களை இந்திய பேட்ஸ்மென்கள் பந்துவீச வைத்தனர். 2011ம் அண்டு தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம். என்று கூறினார். 
 
இன்று ஆட்டம் தொடங்கியபோது முதல் 2 மணி நேரம் சிறப்பாகச் செயல்படவேண்டும் என்பதை உணர்த்தியது. உணவு இடைவேளைக்கு முதல் ஓவரை வீச இஷாந்த் சர்மாவை அழைத்தேன் ஆனால் அவர் ஷாட் பிட்ச் பந்துகளை வீச விரும்பவில்லை.  உயரமாக இருக்கும் அவரால்தான் பவுன்சர்களை நன்றாக வீச முடியும் என்று அவரிடம் கூறினேன். அதன் பின்னர் அவர் தனது அபாரத் திறமையை காண்பித்தார். என்று டோனி கூறின

ad

ad