புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூலை, 2014



வேலை கொடுக்காவிட்டால் மகளின் கருணை கொலைக்கு அனுமதியுங்கள்: மதுரை பெண் கோரிக்கை
எனக்கு அரசு வேலை வழங்குங்கள் அல்லது மனவளர்ச்சி குன்றிய எனது மகளை கருணை கொலை செய்ய அனுமதியுங்கள் என முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரை பெண் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


மதுரை, திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த அபிராம சுந்தரி என்பவர் முதல்வர் ஜெயலலிதாவின் தனிப்பிரிவுக்கு மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், ''எனக்கு கடந்த 1998ஆம் ஆண்டு திருச்செந்தில்குமார் என்பவருடன் திருமணம் நடந்தது. 2002ஆம் ஆண்டு கடன் தொல்லை தாங்காமல் எனது கணவர் தற்கொலை செய்து கொண்டார். எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

மூத்த மகள் நிலா (15) 11ஆம் வகுப்பு படித்து வருகிறாள். இரண்டாவது மகள் ரம்யா (14) மனவளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருக்கிறாள். இவளால் தன்னிச்சையாக செயல்பட முடியாது. அவள் சிறுநீர், மலம் கழிக்க வேண்டுமானால்கூட நான்தான் அழைத்து செல்ல வேண்டும். அவளை குணப்படுத்த முடியாது என டாக்டர்கள் தெரிவித்து விட்டனர்.

கணவரை இழந்த நான், மனவளர்ச்சி குன்றிய பெண் குழந்தை உள்பட 2 பெண்களை வைத்துக்கொண்டு மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன். நான் பி.ஏ. (பாதியில் நிறுத்திவிட்டேன்) படித்துள்ளேன். எனவே, எனக்கு அரசு வேலை ஒன்று வழங்கினால் எனது குழந்தைகளை காப்பாற்றி விடுவேன். அவ்வாறு வேலை வழங்காவிட்டால் என்னுடைய மனவளர்ச்சி குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதியுங்கள்'' எனக் கூறியுள்ளார்.

ad

ad