புலிகளை அழித்தது இந்தியாவுக்கும் பாதுகாப்பாம் :சுப்பிரமணியன் சுவாமி கண்டுபிடிப்பில்

இலங்கையுடன் சிறந்த உறவை பேணுவதற்கு இந்திய பிரதமர் மோடி விரும்புவதாக ஜனதாக்கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சுப்பிரமணியம் சுவாமி இன்று சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் நிறைவடைந்தமை காரணமாக இந்தியாவின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் ஏற்பட்டுள்ளதாக சுவாமி குறிப்பிட்டார்.
இந்தநிலையில் இலங்கையின் பாதுகாப்பு இந்தியாவை பொறுத்தவரை மிகவும் முக்கியமான ஒன்று என்றும் சுவாமி தெரிவித்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடல்வள சுற்றாடல் கற்கைக்கான நிலையம் ஒன்றை நிறுவ இலங்கை விருப்பம் கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
சுப்பிரமணியன் சுவாமி தலைமையிலான குழுவில் பாரதீய ஜனதாக்கட்சியின் வெளிநாட்டு கொள்கை வகுப்பாளர் சுரேஸ் பிரபு ஊடகவியலாளரும் வர்ணனையானருமான மாதவன் நலபாட் ஆகியோரும் அடங்கியிருந்தனர்.