புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூலை, 2014


காணி அளவையாளர்கள் மிருசுவிலில் விரட்டியடிப்பு! - காணி அபகரிப்பை எதிர்த்த உறுப்பினரின் ஆவணங்கள் எரிப்பு
 மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை இராணுவத்தினர் சுவிகரிக்கும் நோக்கில் காணி அளவீட்டு பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
காணி அபகரிப்பை எதிர்த்த உறுப்பினரின் ஆவணங்கள் எரிப்பு
காணி அளவீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்த சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் வீட்டினுள் இனந் தெரியாதோர் நுழைந்து முக்கிய ஆவணங்களை எரித்து நாசப்படுத்தியுள்ளனர்.
இச் சம்பவம் எழுதுமட்டுவாள் பகுதியில் உள்ள சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினரான இராசையா தெய்வேந்திரம்பிள்ளை என்பவரது வீட்டிலேயே இன்று காலை இடம்பெற்றுள்ளது.
மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான 50 ஏக்கர் காணியை இராணுவத்தினர் சுவீகரிக்கும் நோக்கில் இன்று காணி அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட இருந்தது.
இந்நிலையில் குறித்த பிரதேச சபை உறுப்பினர் காணி அளவீட்டினை மேற்கொள்வதை தடுக்கும் நோக்கில் மக்களோடு நின்று தனது ஆதரவையும் வழங்கியதுடன் ஊடகங்களுக்கும் கருத்துத் தெரிவித்திருந்தார்.
காணி அளவீட்டுப் பணிகள் நிறுத்தப்பட்டு குறித்த உறுப்பினர் வீடு சென்று பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு ஆவணங்கள் உள்ளிட்ட பையொன்று எடுக்கப்பட்டு வீட்டுக்கு மேற்குப்புறத்தில் வைத்து எரித்து நாசமாக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தை அடுத்து வடக்கு மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், மாகாண சபை உறுப்பினர் கஜதீபன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் கஜேந்திரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் பிரதேச சபை உறுப்பினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ad

ad