புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூலை, 2014

மலேசிய விமானம்: பிணங்களின் கையில் இருந்து மோதிரத்தை திருடும் கிளர்ச்சியாளர்கள் 

சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தில் பலியானோரின் கையில் இருந்த மோதிரத்தை கிளர்ச்சியாளர்கள் திருடுவது போன்ற புகைப்படம் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 17ம் திகதி நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த போயிங் 777 விமானம் ரஷ்ய கிளர்ச்சியாளர்களால் கிழக்கு உக்ரைன் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
இதில் பயணித்த 298 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாய் உயிரிழந்துள்ளனர். மேலும் இதுவரை 219 சடலங்களை உக்ரைன் மீட்பு படையினர் மீட்டுள்ளனர்.
சடலங்களை எடுத்த சென்ற கிளர்ச்சியாளர்கள், தற்போது தாங்கள் மீட்ட கருப்பு பெட்டியையும், சடலங்களையும் உக்ரைன் அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதுகுறித்து நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் கூறியதாவது, விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பகுதியில் இருந்து கீவ் நகருக்கு சுமார் 200 சடலங்கள் உக்ரைன் அரசிடம் ஒப்படைக்கப்பட்டு பின்பு நெதர்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்டது என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் கிளர்ச்சியாளர்கள் பிணங்களை அப்புறப்படுத்தும் போது விமான பயணிகள் அணிந்து இருந்த மோதிரம் மற்றும் நகைகளை திருடியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதனை நிரூபிக்கும் வகையில் காணொளி ஒன்றில் இராணுவ சீருடை அணிந்த 3 பேர் சடலங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒருவர் ஒரு சடலத்தின் கைவிரலில் கிடக்கும் மோதிரத்தை கழட்டுவது போன்று உள்ளது. இணையதளத்தில் வெளியான இந்த புகைப்படங்கள் பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

ad

ad