புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூலை, 2014


சசிகலாவின் பழைய சொத்துகள் 84.90 லட்சத்திற்கு விற்பனை:
வக்கீல் பி.குமார் வாதம்
 சசிகலாவுக்கு சொந்தமான பழைய சொத்துகளை ரிவர்வே  ஆக்ரோ பாரம் நிறுவனத்திற்கு ரூ.52 லட்சத்திற்கும் மெடோ ஆக்ரோ  பாரம் நிறுவனத்திற்கு ரூ.32 லட்சத்து
90 ஆயிரத்திற்கும் விற்பனை  செய்துள்ளதாக (ரூ.84,90, 000) வக்கீல் பி.குமார் தெரிவித்தார்.


தமிழக  முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர்  தனிநீதிமன்றத்தில் நீதிபதி ஜான்மைக்கல் டிகுணா முன் நேற்று  விசாரணைக்கு வந்தது. குற்றவாளிகள் நேரில் ஆஜராகாமல் இருக்க  விலக்கு அளிக்கக் கோரி அன்புக்கரசு, தனஞ்செயன் ஆகியோர் தாக்கல்  செய்த மனுவை நீதிபதி ஏற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து  ஜெயலலிதா தரப்பு வக்கீல் பி.குமார் 23வது நாளாக தனது வாதத்தைத்  தொடர்ந்தார்.

அப்போது வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள ராமராஜ் ஆக்ரோ  மில்ஸ் மற்றும் ரிவர்வே ஆக்ரோ பாரம் ஆகிய கம்பெனிகளுக்கு  எந்தெந்த வழியில் வருவாய் கிடைத்தது என்ற தகவலை பட்டியலிட்டார்.  அப்போது ராம்ராஜ் ஆக்ரோ மில் கம்பெனி கடந்த 1986ம் ஆண்டு  சென்னையை சேர்ந்த காஞ்சி குடும்பத்தினரால் தொடங்கப்பட்டது.

இந்நிறுவனத்தின் பங்குதாரர் மற்றும் இயக்குனர்களாக வி.என்.சுதாகரன்,  இளவரசி, சுந்தரவடிவேல் ஆகியோர் சேர்ந்த பின், கம்பெனியின்  வளர்ச்சிக்காக பங்கு விற்பனை தொடங்கினர். ஒரு பங்கு ரூ.3 என்ற  வகையில் விற்பனை செய்யப்பட்டது. அதில் 6 லட்சத்து 16 ஆயிரம்  பேர் பங்குதாரராக சேர்ந்தனர். அதன் மூலம் ரூ.18 லட்சத்து 48 ஆயிரம்  வருவாய் கிடைத் தது. கம்பெனிக்கு சொந்தமான கட்டிடம் ரூ.40  லட்சத்து 20 ஆயிரம் செலவில் கட்டப்பட்டது. மேலும் கம்பெனி  வளர்ச்சிக்காக சிப்காட் நிறுவனத்திடம் ரூ.52 லட்சத்த 82 ஆயிரத்து  966 மற்றும் சென்னை அபிராமபுரம் கனரா வங்கியில் ரூ.1.64 லட்சம்  கடன் பெற்றுள்ளதாக தெரிவித்தார். ரிவர்வே ஆக்ரோ பாரம்  கம்பெனிக்காக வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள  சசிகலாவுக்கு சொந்தமான பழைய சொத்து களை விற்பனை செய்துள்ளார்.
அதில் மெடோ ஆக்ரோ பாரம் நிறுவனத்திற்கு ரூ.32 லட்சத்து 90  ஆயிரத்திற்கும், ரிவர்வே ஆக்ரோ பாரம் நிறுவனத்திற்கு ரூ.52  லட்சத்திற்கும் விற்பனை செய்துள்ளார். இது தொடர்பான விவரங்கள்  வருமான வரித்துறையிடம் அறிக்கையாக செலுத்தி அவை ஏற்றுக்  கொள்ளப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்களில் ஜெயலலிதாவுக்கு எந்த  பங்களிப் பும் கிடையாது என்றார். அவருக்கு உதவியாக வக்கீல்கள்  அசோகன், பன்னீர்செல்வம் செயல்பட்டனர்.

அரசு சிறப்பு வக்கீல்  பவானிசிங், அரசு வக்கீல் முருகேஷ் மரடி, திமுக சார்பில் முன்னாள்  எம்பியும், வக்கீலுமான இராம.தாமரைசெல்வன் ஆகியோர் வாதங்களை  கவனித்தனர்.
இதனிடையில், சொத்து குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள மெடோ  ஆக்ரோ பாரம், லெக்ஸ் பிராபர்ட்டீஸ், ராமராஜ் ஆக்ரோ மில்ஸ்,  ரிவர்வே ஆக்ரோ பாரம், சைனோரா பிஸ்னஸ், ஜெ.ரியல் எஸ்டேட்,  ஜெ.எஸ். ஹவுசிங், கிரின் பாரம் ஹவுஸ் மற்றும் ஜெ பாரம் ஹவுஸ்  ஆகிய நிறுவனங்களை விடுவிக்கக் கோரி அதன் இயக்குனர்கள் சார்பில்  கடந்த மே மாதம் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் வக்கீல்கள்  தியாகராஜன் மற்றும் குலசேகரன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.  இது தொடர்பாக வாதம் ந

டந்தது. அரசு தரப்பில் கம்பெனிகளை  விடுவிக்கக்கூடாது என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி ஜான்மைக்கல் டிகுணா, கடந்த  ஜூன் மாதம் வழங்கிய தீர்ப்பில், கம்பெனிகள் சார்பில் தாக்கல் செய்த  மனுக்களை தள்ளுபடி செய்தார். தீர்ப்பு வெளியாகி ஓரு மாதம்  முடிந்துள்ள நிலையில், தனி நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 9  கம்பெனிகள் சார்பில் வக்கீல்கள் ஸ்ரீஹரி மற்றும் குலசேகரன் ஆகியோர்  நேற்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல்  செய்தனர். அந்த மனு இவ்வார இறுதியில் விசாரணைக்கு எடுத்து  கொள்ளப்படும் என்று தெரிகிறது.

ad

ad