புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூலை, 2014

இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக தாக்குதல்;இந்திய மீனவர்கள் குற்றச்சாட்டு 
news
யாழ்.எழுவை தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 18பேர் மீதும் இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமான தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
 
தாம் நேற்று இரவு 10மணியளவில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் தம்மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி தமது உடைகளை எல்லாம் கிழித்து விட்டதாகவும் அவர்கள் மேலும் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad