புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூலை, 2014

அதிமுகவிற்கு தாவும் 7 தேமுதிக எம்.எல்.ஏ.க்கள்? கடும் அதிர்ச்சியில் விஜயகாந்த்
தேமுதிகவில் இருந்து 7 எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, அதிமுக ஆதரவு நிலைப்பாடு எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டசபை தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட, தேமுதிகவில் சில நாட்களிலேயே கூட்டணியில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதனால் தேமுதிக எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர்ராஜன், அருண் பாண்டியன், மைக்கேல் ராயப்பன், அருண் சுப்ரமணியம், சாந்தி, பாண்டியராஜன், தமிழழகன் உட்பட ஏழு பேர், அதிமுகவிற்கு ஆதரவாக செயல்பட ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், தேமுதிக அவைத் தலைவராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு, அதிமுகவில் இணைந்துள்ளார்.
தற்போது மேலும் ஏழு பேரை அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களாக மாற்றும்பணியில், பண்ருட்டி ராமச்சந்திரன் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தேமுதிக வட்டாரங்கள் இதுகுறித்து கூறுகையில், சட்டசபை தேர்தலில், , 10 சதவீதமாக இருந்த தேமுதிக ஓட்டு வங்கி, லோக்சபா தேர்தலில் 5 சதவீதமாகக் குறைந்துள்ளது.
அதனால், கட்சிக்கு எதிர்காலம் இருக்குமா என, நிர்வாகிகளும், எம்.எல்.ஏ.,க்களும் சந்தேகித்து, முகாம் மாறத் திட்டமிடுகின்றனர்.
மேலும், தற்போது சிங்கப்பூரில் இருக்கும் விஜயகாந்துக்கு நாங்கள் இந்தத் தகவலை தெரிவித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.

ad

ad