புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 செப்., 2015

ராஜபக்சர்களின் சொத்துக்கள் பறிமுதல்?


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் சொந்தமான சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு வாய்ப்புள்ளதாக சட்ட பிரிவுகள் தெரிவித்துள்ளது.
ராஜபக்சர்களுக்கு சொந்தமான வியாபாரங்கள் குறித்து சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு, லஞச ஊழல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு உட்பட நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்கமைய அவர்களுக்கு சொந்தமான வியாபாரங்கள் மற்றும் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு வாய்ப்புகள் காணப்படுவதாக சட்ட பிரிவுகளினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ராஜபக்ச குடும்பத்தின் வியாபாரங்களை ஆரம்பிப்பதற்காக பணம் பெற்றுக்கொள்ளப்பட்டமை எவ்வாறு என்பது தொடர்பில் விசேட விசாரணை மேற்கொள்ளப்படுகின்ற நிலையில் அரச வளங்களை பயன்படுத்தல், அரசாங்க பணத்தை தவறாக பயன்படுத்தல், சட்டவிரோதமாக செயற்படல் மற்றும் கருப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுதல் ஊழல், மோசடி ஆகியவைகள் முக்கிய ஆதாரங்களுடன் நிரூபமாகியுள்ளது.
அரசாங்க குடும்பத்திற்கு சொந்தமான (Calton Sports Network) CSN தொலைக்காட்சி நிறுவனம் தொடர்பில் விசாரணை நடவடிக்கைகள் இதுவரையில் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
CSN தொலைக்காட்சி சேவையை ஆரம்பிப்பதற்காக 230 மில்லியன் பணம் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் பல விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவ் விசாரணைகளுக்கமைய குறித்த பணம் ஊழல் முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.
CSN தொலைக்காட்சியின் உரிமைத்துவம் ராஜபக்ச குடும்பத்திற்கானதல்ல என எடுத்துக்காட்டும் வகையில் அதன் நிர்வாகம் செயற்பட்டாலும் நிதி மோசடி விசாரணை பிரிவு விசாரணைகளின் போது CSN தொலைக்காட்சி மஹிந்த ராஜபக்ச குடும்பத்தின் வர்த்தக இடமாக நடத்தி செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தவறாக சம்பாதிக்கப்பட்ட பணம் அதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கருப்பு பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றும் வியாபாரம் ஒன்று சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
குறித்த காரணங்களை கருத்தில் கொண்டு CSN தொலைக்காட்சி சேவையை பறிமுதல் செய்வதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக சட்ட பிரிவு சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில் CSN  தொலைக்காட்சி தொடர்பில் விவரமான அறிக்கை சிங்கள பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ளது.

ad

ad