புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 செப்., 2015

ரவிராஜ் கொலையின் சந்தேக நபர் சுவிஸில்தப்பிச் சென்றுள்ள சரண் என்பவரை கைது செய்ய, குற்றப் புலனாய்வுப் பிரிவினர்
சுவிட்சர்லாந்துக்குப் பயணிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.மிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் சுவிட்சர்லாந்தில் வசித்து வருவதாகத் தெரிவிக்கப்படு கின்றது.இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபராகச் சரண் என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரைக் கைது செய்யச் சுவிட்சர்லாந்து அரசின் உதவியைப் பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானின் மிக நெருங்கிய சகாக்களில் ஒருவரான சரண் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நான்கு பேர்கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர். ஏனையவர்கள் கடற்படை உத்தியோகத்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணைகளின் மூலம் ரவிராஜைக் கொலை செய்யப் பயன்படுத்திய துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
கொலையாளிகள் கொலை செய்வதற்கு ஓட்டோவில் வந்ததாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தியதன் பின்னர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாகவும், இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் வாகனங்களைச் செலுத்திய சாரதிகள் பற்றிய விவரங்களையும் திரட்டியுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் இருவர் அரச சாட்சியாளர்களாக மாற இணக்கம் தெரிவித்துள்ளனர். இவர்களின் தகவல்களின் அடிப்படையில் சுவிட்சர்லாந்துக்குத் தப்பிச் சென்றுள்ள சரண் என்பவரை கைது செய்ய, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுவிட்சர்லாந்துக்குப் பயணிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.அரசின் உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவரின் உத்தரவுக்கு அமைய, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து அரசுடன் இணைந்து கொண்ட கிழக்கு மாகாணத் தலைவர் ஒருவர் கொலையாளிக்கு உத்தரவிட்டதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகக் கொழும்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன

ad

ad